காற்று

மாலை நேரப் பூங்காற்று
மனசுக்குள்ளே தாலாட்டுது

கண்கள் தூங்கிப் போகத்தான்
இமைகளோடு போர் தொடுக்குது

உல்லாசத் தொன்றலிலே உற்சாகம் பிறக்குது
உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் தானக துடிக்குது

என் தேகச் சூடு குறையத்தான்
தென்றல் வந்து தண்ணீராகப் பாயுது

எங்கோ தோன்றி, காடு மலைகள்
தாண்டி என்னைத் தேடி வருகிறது

கண்களுக்கு தெரியாமல் என்னை
சுற்றி சுற்றி பறக்குது

கைகளுக்கு சிக்காமல் என்னை
அணைத்து பிடிக்குது

கடலோடு நீராடி மேகத்தில்
உறவாடி என்மேல் விளையாடுது

உழைத்து ஓய்ந்த நேரத்தில்
வியர்த்து வந்த துளிகள்

குளிர்ச்சியான காற்றில்
பனித்துளிகளாக விழ்ந்தது!

இந்த வசந்த பூங்காற்றுக்கு
முடிவேது! முதலேது!

-ஜெய்கணேஷ்

Leave a Reply

© 2020 Spirituality