விளையாட்டு வீரர்கள் உட்கொள்ள வேண்டிய முளைகட்டிய தானியம்

கொண்டக்கடலையை முளைகட்டிய பிறகு விளையாட்டு வீரர்கள், கடினமான வேலை செய்பவர்கள் உட்கொள்ள உடல் வலுபெற்று அவர்கள் சிறப்பாக வாழ உதவி செய்யும். வாழ்க வளத்துடன்! ஓம் நற்பவி!

முளைகட்டிய கொண்டக்கடலை

மணத்தக்காளி கீரை – வயிற்றுப் புண் வாய்ப்புண் சரியாகும்

  • மணத்தக்காளி கீரை சமைத்து சாப்பிட வயிற்றுப் புண் வாய்ப்புண் சரியாகும்.
  • வயதானவர்கள் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் கீரையாக சாப்பிடக் கூடாது.
  • அதற்கு பதிலாக மணத்தக்காளி கீரையை சூப்பு வைத்து வடிகட்டி வெறும் கீரைத்தண்ணீரை மட்டும் குடித்தால் நன்மை உண்டாகும்.

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் பொன்மொழிகள்

திருக்குறள் :

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

பொருள் :

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.


குறள் :
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

நீதி :
தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.


உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை… தன் உயிர் இருக்கும் வரை… முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்… !!!!


வாழ்க்கை ஓரு வட்டம்.
இன்று நீங்கள் பிறர்க்கு செய்ததை,
நாளை பிறர் உங்களுக்கு அதையே செய்வார்கள்..


நல்ல விதை விதைத்தால் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனை கொடுக்கும்.. அதே போல் நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் வாழ்க்கை பிரகாசிக்கும்…. !


எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி….
எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்…. !!!!
தேடியது கிடைக்க வில்லை என்பதை விட….
தேவையானயவையை தேட வில்லை என்பதே உண்மை….


நம் எண்ணங்கள் உயர்வானதாக இருந்தால் நாம் செய்யும் செயல்களும் உயர்வானதாகவே இருக்கும்…. !!!


நம்மை நாம் கேள்வி கேட்காதவரை…..
நம் தவறுகளை நாம் உணர போவதில்லை…..


நாளை என்ன செய்யலாம் என்று திட்டமிடுவது அவசியம்.
நாளைக்கென்று திட்டமிடப்படும் காரியங்களை நடக்குமா என்று சந்தேகிப்பது பலவீனம்.. !!!


இந்த உலகில் எதை எதையோ தேடி அலையும் மனதிற்கு இறுதியில் தேவைப்படுவது அமைதி மட்டுமே….


துணிந்தால் தூண்கள் துரும்பாகும்…..
துவண்டால் நாணல் இரும்பாகும்…….


வீழ்ந்தால் கற்றுக்கொள்..
வாழ்ந்தால் மற்றவர்களுக்கு கற்றுக்கொடு……


நம் வாழ்வில் எல்லாம் ஓரு நாள் மாறும், ஆனால்
ஓரே நாளில் மாறிவிடாது..


உணரும் வரை
உண்மையும் ஓரு பொய் தான்…
புரிகின்ற வரை வாழ்க்கையும் ஓரு புதிர் தான்… !


முடியும் என்று
தெரிந்தால் முயற்சி எடு…
முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு…
‘வெற்றி நமதே’


வாழ்க்கை என்பது நாணயம் போல!
இன்பம் ஓரு பக்கத்திலும்!
துன்பம் ஓரு பக்கத்திலும் இருக்கும்!
ஒரு நேரத்தில் ஓரு பக்கம் தான் கண்ணுக்கு தெரியும் மறந்துடாதீங்க…
மறுபக்கம் அதன் வாய்ப்பிற்காக காத்திருக்கும்.. !


தவறாகி விடுமோ என்ற
நம் எண்ணம் தான்
பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது….


‘பணிந்து போ’
உன் தகுதியை உயர்த்தும் … !
‘துணிந்து போ’
உன் திறமையை உயர்த்தும்… !!!


கோபமும் கண்ணீரும் உணர்வுகளின் பிரதிபலிப்பு..
கோபத்தின் போது மௌனம் காப்பதும், கண்ணீரின் போது அமைதி காப்பதும், வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள்… !!


இனிப்பாய் இருந்தாலும் விழுங்கி விடுவார்கள்…
கசப்பாய் இருந்தாலும் துப்பி விடுவார்கள்…
உப்பாய் இருங்கள் அப்போது தான் சரியாக உபயோகிப்பார்கள்…


வாடிபோகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கின்றன
வாழ பிறந்த நாம் ஏன் அழ வேண்டும்…


கற்றுக்கொள்ள முயற்சிப்பதும்…
கற்றுக்கொண்டதை தொடர்ந்து செயலாக…
மாற்றுவதும் தான் வெற்றியின் ரகசியம்..!


கற்றுக்கொண்டே இருங்கள்! உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது…
உலகில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ளுங்கள்…
மாற்றம் ஒன்றே மாறாதது… !!


உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை… !!!
உறவுகளின் அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்… !!!


விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்… இது தான் மனிதனின் எண்ணம்.


நம்மில் பலர் வாழ்க்கையை விருப்பத்தோடு வாழ்பவர்களை விட,
விதியென்று வாழ்பவர்களே ஏராளம்… !!!


“யாருடைய மாற்றமும் உன்னை பலவீனமாக்கக் கூடாது”


நிலையானதென்று ஒன்றுமே இல்லை இவ்வுலகில்…
ஒவ்வொரு சோகமும் துன்பமும் வாழ்க்கையில் பாடத்தை கற்று தாவே வருகின்றன…
இதுவும் கடந்து போகும்!!!


வெற்றி தள்ளி போகலாம்.. ஆனா,
முயற்சி வீண் போகாது…


காயங்கள் உருவாக கத்தி தேவை இல்லை…
சிலரின் மாற்றங்கள் போதும்…
வலிக்க வலிக்க கொல்லும்!!!


வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமை கொள்..
நடக்கவில்லையா..
அதை விட அதிகளவு பெருமை கொள்
ஏனன்றால்
நாளை அதை விட சிறப்பாக நடக்கும்… !


இந்த உலகில் நாம்…
கொண்டு செல்வதாக
இருந்தாலும்,,
விட்டு செல்வதாக இருந்தாலும்,,
அன்பு.!!நட்பு.!!பாசம்.!!
இதை தவிர வேற எதுவும் இல்லை.!!!


ஆசைக்காக பொய்யாக வாழ்வதைவிட,
பாசத்திற்க்காக உண்மையாக வாழ்ந்து பார்,
மனதிற்குள் வலியும் குறையும்
வாழ்க்கையும் அழகாக இருக்கும்.


தன்னம்பிக்கை! தெளிவு!!! துணிச்சல்!!!
இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்தி செல்லும்…


ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஓரு வேதனையான கதை உண்டு!
ஒவ்வொரு வேதனையான கதையும் ஓரு வெற்றிகரமான முடிவைக் கொண்டுள்ளது!
வலியை ஏற்று வெற்றிக்கு தயாராருங்கள்.. !!!


நம் மகிழ்ச்சியை கொன்றுவிடுவதற்கு காரணம்…
நாமே தேடிக்கொண்ட சில பொய்யான உறவுகள்…


ஓரு வார்த்தையும்,
ஓரு நொடியும்,
உன் வாழ்கையையே மாற்றிவிடும்… !!!
எதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளாதே… !!!


எதிர்காலம் பற்றிய உங்கள் பயத்தால் எந்த அதிசயங்களும் நடந்து விடாது!!!
எதையும் எதிர் கொள்ளவேண்டும் என்ற துணிவே எதிர்காலத்தை ஏற்றமுடன் சிறப்பாய் வழி நடத்தும்!!!
கவலை விடுங்கள்,
கடமையை தொடருங்கள்.. !!!


உங்களுக்கு தேவையான எல்லா வலிமையையும்!!!
உதவியும் உங்களுக்குக்குள்ளே இருக்கின்றன!!!
நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்… !!!


உண்மை இல்லா இடத்தில் உரிமை கேட்பது தவறு!!!
உரிமை இல்லாத இடத்தில் பாசம் வைப்பது தவறு!!!
பாசம் இல்லாத இடத்தில் பழகுவதும் தவறே.. !!!
நியாயம் இல்லாத இடத்தில் நீதி கேட்பதும் தவறு!!!


சாதிக்க நினைக்கும் உன்னை சோதிக்க வருவது தான் கோபம்…
லாபம் யாருக்கு உன் கோபத்தால்…
தடுக்க நினைப்பவருக்கு தான்…
பொறுமை கொண்டு, உண்மையாய் உழைத்து வா என்றும் வெற்றி நிச்சயம்!!!


வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால் உன் கால்களால் நடந்து போ…
மற்றவர்களின் முதுகில் ஏறி போக நினைக்காதே…


எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான் உடையாத வரை ஓரு முகம் …
உடைந்து விட்டால் பல முகம் ……


வாழ்க்கையில் சில இழப்புகளையும்,பல பிரச்சனைகளையும் பார்த்த பின்பு தான் அடக்கத்துடன் வாழ கற்றுக்கொள்கிறோம்.. !!!


கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு
ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையை கடந்தவர் இல்லை…


எதிர்த்து நிற்பவன் கூட சில நேரங்களில் கோழையாகலாம்..!!யாரையும் எந்த நேரமும் எதிர்பார்த்து நிற்காதவனே வீரன் ஆகிறான்..!!


தன்னம்பிக்கை!!!
தெளிவு!!!
துணிச்சல்!!!
இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்தி செல்லும்!!!


நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே,
நம் வாழ்க்கையை அழகு படுத்தும்…


வாழ்க்கையில் நீ யாரையும் சாய்ந்து வாழ்ந்து விடாதே…
உன் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் உனக்கு துணை வரும்…


தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது…
எதிரியை விட நம் நாக்கையே அதிகம் அடக்க வேண்டும்…


விலை மதிப்பற்ற செல்வம் அறிவு!
பலமான ஆயுதம் பொறுமை!
மிக சிறந்த பாதுகாப்பு உண்மை!
அற்புதமான மருந்து சிரிப்பு!


கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்…


சில காயங்கள் “மருந்தால்” சரியாகும்,
சில காயங்கள் “மறந்தால்” சரியாகும்.


நேரம் சரி இல்லை இது திறமை இல்லாதவனின் வெற்று பேச்சு…நேரம் போதவில்லை இது வெற்றி வீரனின் மூச்சு…


நடப்பதுதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழப் பழகிவிட்டால்!!!
மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டாம்!!!
மகிழ்ச்சியே நம்மை தேடி வரும்…!!!


குத்தி கிழிக்கிற முள்ளா இருந்தாலும் சரி…
குத்திகக்காட்டுகிற மனுஷங்களா இருந்தாலும் சரி…
தூக்கி ஓரமா போட்டு விடுங்கள்…
இல்லைனா மறுபடியும் நம்மள தான் காயப்படுத்தும்…


வ(ழி)லியில் வாழ்க்கையை தேடாதீர்கள்,
வாழ்க்கையிலும் வ(லி)ழிகள் உண்டென கடந்துவிடுங்கள்…


தேடியது கிடைக்க வில்லை என்பதை விட…
தேவையானவையை தேட வில்லை என்பதே உண்மை…


நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால் சோம்பேறி…
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் சுறுசுறுப்பானவர்…நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்தால் வெற்றியாளர்…


நண்பனை நேசிப்பது போல் எதிரியையும் நேசிக்க பழகுங்கள்!!!
நண்பன் வெற்றிக்கு துணை இருப்பான்!!!
எதிரி வெற்றிக்கு காரணமாய் இருப்பான்!!!


தோல்விகள் என்பது உன்னை தூங்க வைக்கும் தாலாட்டு அல்ல…
நீ நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்…


உங்கள் ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது…
ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது…


வெறுக்கும் கண்கள் வேடிக்கை பார்க்கட்டும்.
தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில்!


கவலைகளை கண்டு கலங்காதே…
தோல்விகளை கண்டு விலகாதே…
நீ செய்யும் செயலில் உறுதியாய் இரு…
வெற்றி உன்னை தேடி வரும்…


ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர…
அடுத்தவர் சொல்வதைக் கேட்டு முடிவு செய்ய கூடாது…


தோல்விக்கான பரிசு அனுபவங்களே தவிர அவமானங்கள் அல்ல!!!


கற்றுக்கொண்டே இருங்கள், உலகம் மாரிகொண்டே இருக்கிறது…உலகில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளுங்கள்…


சிலரோடு ஒப்பிடும்போது வெற்றியடைகிறோம், சிலரோடு ஒப்பிடும்போது தோல்வியடைகிறோம்..
எவரோடும் ஒப்பிடாத போது மட்டுமே மகிழ்ச்சியடைகிறோம்… நிரந்தரமாக…


நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்…
நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்…


வாழ்கை வாழ்வதற்கே தவிர
இல்லாததை…
கிடைக்காததை…
நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை..!!!


“தேவையற்ற எண்ணங்களை சுமக்கும் வரை வாழ்வில் நிம்மதி என்பது சாத்தியம் இல்லாததாகவே இருக்கும்”


மறைக்க முயன்ற குற்றங்கள், மூடி வைத்த நெருப்பாகும்…
மன்னிப்பு கேட்ட குற்றங்கள், நீர் ஊற்றிய நெருப்பாகும்…!!!


துரோகத்தை சமாளித்து விடுகிறோம்…
துரோகிகளை கண்டுபிடுப்பதில் தோற்று விடுகிறோம்…


முடியும் வரை முயற்சி செய்!
உன்னால் முடியும் வரை அல்ல…
நீ நினைத்ததை முடிக்கும் வரை…


பொறுமை இல்லாமல் வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட.,
பொறுமையாய் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களே அதிகம்.


அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல,
அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை ..


முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை…
முடியும் வரை போராடு வென்று விடலாம்..!!!


நம்மை தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல்
நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி…!!!


நமக்கான ஆறுதல் நம்மிடம் தான் உள்ளது..
மறந்து போவதும்!
கடந்து செல்வதும்!


எதிர் பார்ப்பதை விட எதிர் கொள்வதைக் கற்று கொள்ளுங்கள்..
இங்கு எதிர் பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை…
எதிர் கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது!!!


சரி தவறு எல்லாம் சமூகம் வகுத்ததே…

மற்றவருக்கு நாம்
செய்யும் செயலினால் துன்பம் இல்லையெனில் எல்லாம் சரியே…!!!

இட்லியின் பயன்கள்

நீங்கள் தென்னிந்தியாவில் உள்ள எந்த உணவகத்திற்கும் போனாலும், மெனுவில் இட்லி முதலிடத்தில் உள்ளது. டிஃபினை ‘அற்புதமான இட்லி’ என்று தொடங்கும் எங்கள் ஊர்க்காரர்களின் பழக்கம் அவ்வளவு எளிதில் மாற்றப்படவில்லை.

நாற்பது வயதைத் தாண்டியவர்கள், தங்களின் இளம் பிராயத்தில் அம்மாவின் கையால் பதினைந்து, இருபது இட்லிகளை அள்ளிப் போட்டுக்கொண்டதாகச் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போகும் இன்றைய தலைமுறையினரும் உண்டு. இட்லியின் வயது 700 ஆண்டுகள்.

ஆம்… இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய் இருந்து வருகிறது.

அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா என அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது.

ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உண.வாக இருக்கிறது.

எல்லாருக்குமான உணவாகவும், எல்லா காலத்திலும் சாப்பிடக்கூடிய உணவாகவும், இந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது.

2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.

தினமும் 4 இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரி கள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.

இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது, தசைகளுக்கு பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

இட்லியோடு சாம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. அசைவம், கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்லியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது. வயிற்று புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.

இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்லி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, வெஜிடபிள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்லியைக் கொடுக்கலாம்.

இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.

இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து இல்லாத உணவாக இருக்கிறது.

இட்லி மாவை 12 மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள் உருவாகின்றன.

இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்தக்கூடாது.

பழைய மாவில் இட்லி சுடக்கூடாது. இட்லியுடன் சோடா உப்பு போடக்கூடாது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த இட்லியை சாப்பிடுவது சிறந்த உணவுப் பழக்கம் கிடையாது. ஆகவே இட்லி விரும்பி சாப்பிட விரும்புபவர்கள் தினமும் இட்லி மாவு அரைத்து அதனை உண்ண வேண்டும். அனைவரும் சாப்பிடக் கூடிய அற்புதமான உணவு இட்லியாகும்.

இட்லியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள் அது இட்லியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது.

இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இட்லியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் 12 மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்க கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்லி இருக்கிறது.

Chinese Body Clock – Human organ Time Chart – மனித உடல் உறுப்புகளின் இயக்க நேரம்

Chinese body clock, Human organ Time Chart, Human, Chart, Time

நுரையீரலின் அற்புதம், கல்லீரலின் கம்பீரம், கிட்னியின் தியாகம்

நுரையீரலின் அற்புதம், கல்லீரலின் கம்பீரம், கிட்னியின் தியாகம், கர்மா உண்மையா? கர்மாவை வெல்ல முடியுமா?

https://youtu.be/vgWgpeBNzqQ

மனநோய், தீயசக்தி | லட்சியம் தான் வாழ்க்கைக்கு எதிர்பாகின்றதா? இல்லை!

மனநோய் என்பது தீர்க்கக் கூடிய ஒரு வியாதி தான். இது உள்ளத்தில் உற்பத்தியாகுவதற்கு முன்பு உடலில் பாதிப்பினை ஏற்படுத்தும். அந்த பாதிப்பே உடல் மனம் இரண்டையும் பாதிப்பினை ஏற்படுத்தும். அனைத்து விதமான சக்திகளையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான விசயம் உங்கள் மூளையிலேயே உள்ளது.

அந்த மூளைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் அற்புதமாக சரிசெய்ய இறைவழிபாடு உதவி செய்யும். தீயசக்தி என்பது அனைத்து விதமான மனிதர்களின் தீமையான காலங்களிலேயே செயல்படத் தொடங்கும். மனநோய், தீயசக்தி | லட்சியம் தான் வாழ்க்கைக்கு எதிர்பாகின்றதா? இல்லை!

வைட்டமின் டீ இல்லாமல் ஒருவர் வாழ முடியாது

முடிந்தால் வாழு, வைட்டமின் D குறைவு உலக நோயிக்கு இதுதான் காரணம்.

வைட்டமின் D இல்லாமல் ஒருவன் உயிர் வாழ முடியாது. வைட்டமின் டீ சத்து குறைவு தான் அனைத்து வைரஸ் வியாதிகளுக்கும் காரணமாக அமைகின்றது.

ஆகவே அனைவரும் இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டீ சத்தை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். வைட்டமின் டீ இல்லாமல் ஒருவர் வாழ முடியாது.



https://youtu.be/kPUv5SLUOhc

© 2020 Spirituality