மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன – திதி

மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன.

ஒன்று – கிழமை

இரண்டு – திதி

மூன்று – நல்சித்திரம் (நட்சத்திரம்)

நான்கு – யோகம்

ஐந்து – கரணம்

இவற்றில் கிழமை, திதி , நல்சித்திரம் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது தான். ஆனால் யோகமும் கரணமும் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்தில் விவாதித்து அமைத்தனர்.

இதை நாம் முறையே வரிசைப்படி பார்ப்போம்/

1. கிழமை

கிழமை என்பது இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே முதல் தமிழ் சங்கத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய கிரகங்களை நம் முன்னோர்கள் அறிந்து அவற்றின் ஓட்டத்தை வைத்து 7 கிரகங்களையும் மற்ற விண்மீன்களைக் காட்டிலும் வேகமாக நகர்வதை அவதானித்து இந்த 7 கிரகங்களும் நமது சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது என்பதனை முதல் தமிழ்ச் சங்கத்திலேயே விவாதித்து முடிவு செய்திருந்தார்கள்.

சூரியனை மையமாகக் கொண்டு 7 கிரகங்களும் சுற்றுகின்றன என நன்கறிந்து. நமது பூமியும் சூரியனைத் தான் சுற்றுகிறது என்பதனை புரிந்து கொண்டு, நமது கண்களுக்கு மாயையால் சூரியன் மேலெழவதாக தெரிந்தாலும், நமது பூமிக்கு பதிலாக சூரியனை ஒரு கிரகமாக வடித்தார்கள்.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள 7 கிரகங்களும் நடுவில் சூரியனும், சூரியனைச் சுற்றி முதல் வட்டப் பாதையில் புதனும், இரண்டாவதாக வெள்ளியும், மூன்றாவதாக பூமியும், பூமியைச் சுற்றி திங்களும், நான்காவதாக செவ்வாயும், ஐந்தாவது வியாழன் மற்றும் ஆறாவதாக சனி கோளும் இடையறாது சுற்றிக் கொண்டு இருப்பதாக முதலாம் தமிழ் சங்கத்தில் முடிவு செய்து இருந்தார்கள். அப்பொழது ராகுவையும் கேதுவையும் அறிய வேண்டிய தேவை இல்லாததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்படி ஏழு கிரகங்களையும் பாமர மக்களுக்கும் புரியவைக்கதான் கிழமையை உருவாக்கினார்கள்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புதனும், வெள்ளியும், திங்களும் ஆக மூன்று கோள்கள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே அதாவது மேற்கே (மேலே) செவ்வாய் வியாழன், சனி ஆகிய மூன்று கோள்கள் உள்ளது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள கோள்கள் பெண் கோள்களாகவும், அதாவது பெண்களின் குணங்களை கொண்ட கோள்களாகவும், பூமிக்கு வெளியே உள்ள கோள்களை ஆண்கள் குணங்களாகவும் சித்தரித்து ஒரு புத்தாண்டிலிருந்து முதல் நாளை ஞாயிறு என ஒளி மிகுந்த நாளில் ஆரம்பித்து, அடுத்து ஒரு பெண் கிரகம் திங்களாகவும் அடுத்து ஒரு ஆண் கிரகம் செவ்வாயாகவும், அடுத்து ஒரு பெண் கிரகம் புதனாகவும் அடுத்து ஒரு ஆண் கோள் வியாழனாகவும், அடுத்து ஒரு பெண் கிரகம் வெள்ளியாகவும், அடுத்து ஒரு ஆண் கிரகம் சனி என வகைப் படுத்தி ஒரு வாரத்திற்கு 7 நாட்களாக அமைத்தார்கள்.

1.ஞாயிறு – நீர் வண்ணம்.

2.திங்கள் – நீலம்

3.செவ்வாய் – சிவப்பு

4.புதன் – மஞ்சள்

5.வியாழன் – வெள்ளை.

6. வெள்ளி – பச்சை.

7.சனி – கருப்பு.

என 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரிசைப் படுத்தியுள்ளார்கள்.

இந்த வாரம் எனும் 7 நாட்களுக்கும் நம் மூச்சுக் காற்று நம் உடலில் 6 சக்கரங்களைக் கடந்து 7வது சக்கரமான பிரபஞ்ச ஆற்றலில் இணைவதையும் சம்பந்தபடுத்தி வாரம் முதல் தமிழ்சங்கத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு நாளை 24 ஓரைகளாக்கி அதில் மூச்சுக் காற்று 7 சக்கரங்களை மூன்று முறை கடந்து அடுத்த நாள் காலை சூரிய உதயத்தில் எந்த சக்கரத்தில் மூச்சுக் காற்று இருக்குமோ அதை கிழமை ஆக்கி இருப்பதால் தான் இந்த வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை இந்த உலகில் உள்ள அனைவரும் ஏற்று இன்று வரை மாற்றாமல் உலகம் முழுவதும் அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் உலகம் முழுதும் வாழ்பவர்கள் குமரிக்கண்டம் நீருழியில் மூழ்கிய போது காவடியுடன் இலங்கை வரை நடந்து வந்து அங்கிருந்து நெய்தல் வழியாக புலம் பெயர்ந்த நம் உறவுகள் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் இதுதான்.



2. திதி

திதி என்பதும் 20,,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. திங்கள் நமது பூமியை 29.5 (30 திதி) நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. அதே போல் நிலா தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும் அதே 29.5 நாட்கள் அல்லது 30 திதிஆகிறது.
இந்த காரணத்தால் பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை தான் நாம் பார்க்க முடியும் நிலவின் பின்பகுதியை நாம் பார்க்கவே முடியாது. அதனால் தான் நமது வழிவழியாக வரும் நிலா கதையில் கூட பாட்டி வடை சுடும் காட்சி எப்பொழுதும் தெரிந்து கொண்டு உள்ளது, வேறு வடிவங்களே தெரியாது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் பொழது அமாவாசையாகவும், நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும் பொழுது பெளர்ணமியாகவும் தெரிகிறது. நாம் பூமியிலிருந்து நிலவை பார்ப்பதால் தான் இந்த காட்சி. அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து வளர்பிறை, முதல் பிறை, இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை, நான்காம் பிறை இப்படி பதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து தேய்பிறையாகி 14 நாட்களுக்குப் பிறகு அமாவாசையாக மாறும். இதில் அமாவாசைக்கு பிறகு வளர்பிறை.

முதல் பிறை – பிரதமை, பாட்டிமை

இரண்டாம் பிறை = துவாதியை

மூன்றாம் பிறை – திரிதியை

நான்காம் பிறை – சதுர்த்தி

ஐந்தாம் பிறை – பஞ்சமி

ஆறாம் பிறை – சட்டி

ஏழாம் பிறை – சப்தமி

எட்டாம் பிறை – அட்டமி

ஒன்பதாம் பிறை – நவமி

பத்தாம் பிறை – தசமி

பதினொன்றாம் பிறை – ஏகாதசி

பன்னிரன்டாம் பிறை – துவாதசி

பதின்மூன்றாம் பிறை – திரியோதசி

பதினான்காம் பிறை – சதுர்தசி

அதற்கு அடுத்த நாளிலிருந்து தேய்பிறை. அதேபோல் மீண்டும் 14 அதே திதிகள் அதற்கு அடுத்த நாள் அமாவாசை. இப்படி இரண்டு 14 திதிகளைக் கூட்டி 28 நாட்கள் ஆன பின் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை ஆக மொத்தம் 30 திதிகள். இதை ஒரு மாதமாக 12,,960 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துள்ளார்கள். ஆனால் நிலா, பூமியை சுற்ற 29.5 நாட்கள் தான். இதை சரி செய்ய சந்திர நாட்காட்டியில் முதல் மாதத்திற்கு 29 நாட்களும், இரண்டாம் மாதத்திற்கு 30 நாட்களும், மூன்றாம் மாதத்திற்கு 29 நாட்களாகவும் நான்காம் மாதம் 30 நாட்களாகவும் இப்படி 6 மாதங்கள் 29 நாட்களாகவும் 6 மாதங்கள் 30 நாட்களாகவும் ஆக மொத்தம் 12 மாதங்களுக்கு 354 நாட்கள். ஒரு வருடம் என்பதை 12 மாதங்களாக 354 நாட்கள் என வடிவமைத்துக் கொண்டார்கள். சந்திர நாட்காட்டியில் 12 அமாவாசையும் 12 பௌர்ணமிகளும் இருக்கும். நிலவின் ஒரு நாள் பயணத்தை 13 திகிரி நகர்வு ஒரு திதி என கொண்டார்கள். திதிகளின் காலம் ஒரே மாதிரி 24 மணி நேரம் என்று இருக்காது. ஒவ்வொரு திதியும் காலம் வேறுபடும். நிலவு கிழக்கு தொடுவானத்தில் உதிக்கும் நேரம் தான் திதி.
இந்த திதி கணக்கில் தான் சூரியன் தன் 33.33 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் ஒரு சுற்று சுற்றி வர 96,00,000 திதிகள் ஆகிறது என கணித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பிரபஞ்ச ஆற்றல் சூரியனிலிருந்து வருகின்றது – 247 ஆண்டுகள்

247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்) சூரியனின் ஒரு பாத நகர்வு எனில் சூரியன் ஒரு வட்டம் அதாவது 360 திகிரி நகர 108 பாதங்கள் கடக்க வேண்டும்.

108 X 247 = 26, 676 ஆண்டுகள் ஆகும் 108 பாதங்கள் கடக்க . தமிழ் எழுத்துக்களில் 247 என்ற எண்ணில் எழுத்துக்களை வடிக்க வேண்டும் எனில் சூரியனின் இரண்டு முழு சுற்றை பார்த்தால் தான் முடியும். எனில் இரண்டு தடவை சூரியன் சுற்ற ஆகும் காலம் 26, 676 x 2 = 53,352 ஆண்டுகள்.

53, 352 ஆண்டுகள் சூரியன் சுற்றை கவனித்தால் ஒழிய ஒரு பாதம் சூரியன் நகர்வதற்கு 247 ஆண்டுகள் ஆகும் என தமிழ் எழுத்துக்களில் அந்த எண்ணை வடிக்க முடியும்.
தமிழ் வார்த்தைகள் சித்திர எழுத்துக்கள் என குறைந்த பட்சம் 53 ஆயிரம் ஆண்டுகள் சூரிய நகர்வை நம் முன்னோர்கள் அவதானித்து இருப்பார்கள் என்பது தெரிகிறது.


பிண்டத்தில் அண்டமாய்
அண்டத்தில் பிண்டமாய்
ஜோதியில் வேதியாய்
வேதியல் ஜோதியாய்

நீருள்ளே நெருப்பிருக்கும்
ரகசியத்தை அறியாதவர்

நெருப்புள்ளே நீர் இருக்கும்,
நீர் இருக்கும் நெருப்பினை
நீர் அறிவது எக்காலம்.

அந்தகார அந்தியில்
அந்தி சாயா சந்தியில்
முந்தி வந்து முந்தாமல்
முடிந்து போன மாயமே,

முட்டி வந்து முட்டையுள்ளே
முட்டி நின்ற முட்டமே
முட்டையுள்ளே இட்ட முட்டான்
இரண்டும் கெட்டான் ஆனதே

இரண்டும் கெட்டு நான்கு வந்து
ஐந்துமாகி போனதே…
ஐந்து இங்கு ஆறுமாகி,
ஆறு எங்கும் நீருமாகி,
நீரு உள்ளே நெருப்புமாகி,
நெருப்பும் நீரு ஆனதே!

சிறுநீரக கல் கரைக்கும் மூலிகை கஷாயம் தயாரிக்கும் முறை! Herbal Decoction for Supporting Kidney Stone Dissolution!

🔹 தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் – 200 ml
  • சிறுகன் பீலை – 10 கிராம்
  • கில்லாநெல்லி – 10 கிராம்
  • நெரிஞ்சில் பொடி – 10 கிராம்
  • மல்லி (கொத்தமல்லி விதை) – 5 கிராம்

🔹 தயாரிக்கும் முறை:

  1. மேலே கூறிய அனைத்தையும் 200 ml தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. அது சுமார் 60 ml ஆக குறையும் வரை நன்றாக காய்ச்சவும்.
  3. பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

🔹 குடிக்கும் முன் சேர்க்க வேண்டியது:

  • அரை எலுமிச்சை சாறு
  • வாழைத்தண்டு சாறு – 10 ml
  • தேன் – 1 டீஸ்பூன்

🔹 எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்:
👉 தினமும் காலை வெறும் வயிற்றில் 1 வாரம் குடிக்க வேண்டும்.

Ingredients:

  • Water – 200 ml
  • Sirukan Peelai (Aerva lanata) – 10 g
  • Keezhanelli (Phyllanthus niruri) – 10 g
  • Nerinjil Powder (Tribulus terrestris) – 10 g
  • Coriander seeds – 5 g

Preparation Method:

  1. Add all the above ingredients to 200 ml of water.
  2. Boil until the liquid reduces to approximately 60 ml.
  3. Strain the decoction.

Add Before Consumption:

  • Juice of ½ lemon
  • Banana stem juice – 10 ml
  • Honey – 1 teaspoon

Dosage:

Take once daily in the morning on an empty stomach for 1 week.

Benefit:

This herbal formulation is traditionally used to help support the dissolution and elimination of kidney stones and improve urinary health.

தச நாடி

தச நாடி
மனித உடலில் உயிர்சக்தி (பிராணம்) ஓடும் நுண்ணிய பாதைகளே நாடிகள்.
யோக–சித்த நூல்களில் 72,000 நாடிகள் உள்ளன எனக் கூறப்படுகிறது.
அதில் மிக முக்கியமான பத்து நாடிகள் — தச நாடிகள்.
🌸 தச நாடிகள் (பத்து நாடிகள்)
1️⃣ இடா நாடி 🌙
இடம்: இடது மூக்குத் துளை
பணி: மன அமைதி, குளிர்ச்சி, உணர்ச்சி சமநிலை
2️⃣ பிங்கள நாடி
இடம்: வலது மூக்குத் துளை
பணி: செயல், உடல் வெப்பம், ஜீரண சக்தி
3️⃣ சுஷும்னா நாடி
இடம்: முதுகுத் தண்டு நடுப்பாதை
பணி: ஆன்ம விழிப்பு, குண்டலினி சக்தி இயக்கம்
4️⃣ காந்தாரி நாடி
இடம்: இடது கண்
பணி: பார்வை தெளிவு
5️⃣ ஹஸ்திஜிஹ்வா நாடி
இடம்: வலது கண்
பணி: கண் ஒளி, நரம்பு ஒழுங்கு
6️⃣ பூஷா நாடி
இடம்: வலது காது
பணி: கேள்விசக்தி
7️⃣ யசஸ்வினி நாடி
இடம்: இடது காது
பணி: ஒலி உணர்வு
8️⃣ அலம்புஷா நாடி
இடம்: குதப்பகுதி
பணி: கழிவு நீக்கம்
9️⃣ குஹு நாடி
இடம்: பாலுறுப்பு
பணி: இனப்பெருக்க சக்தி
🔟 சங்கினி நாடி
இடம்: தொண்டை
பணி: பேச்சு, சுவாச ஒழுங்கு
ஆன்மீகக் குறிப்பு
இடா மற்றும் பிங்கள நாடிகள் சமநிலையடைந்தால்
➡ சுஷும்னா நாடி திறக்கும்
➡ மன அமைதி, தெளிவு, ஆன்ம வளர்ச்சி கிடைக்கும்.

© 2020 Spirituality