ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கண்கள் துடிப்பது ஆரோக்கியமற்ற உடல் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சோர்வு, கண் வறட்சி, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பது, படிப்பது, சரியாகத் தூங்காமல் இருப்பது, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவை கண் இமை துடிப்புகளை உண்டாக்கும்.
எந்த கண் துடித்தால் நல்லது?
ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண் துடிப்பதால் மிக அற்புதமான, அதிர்ஷ்டகரமான பலனகளைப் பெற்றிடலாம் என நம்பப்படுகிறது.
ஆப்பிரிக்கா பழமையான கலாச்சாரம், நம்பிக்கைகளைக் கொண்டது. இங்கு வலது கண் இடது கண் என பார்க்காமல், மேல் கண் இமை துடித்தால் வெற்றியும், மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன நடக்கும்?
அதுவே, பெண்களின் இடது கண் துடித்தால் அது சுப அறிகுறியாக கருதப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மற்றும் வாழ்க்கை குறித்த நல்ல செய்திகள்.
கண் புருவம் துடிப்பது ஏன்?
கண்கள் அல்லது புருவங்களின் அருகிலிருக்கும் தசைகள் துடிப்பது அரிதாக நிகழும் தற்செயலான செயல்பாடு தான். வலது கண் அல்லது இடது கண் துடிப்பதற்கென்று பலனேதும் கிடையாது, அது மூடநம்பிக்கை தான். நீங்கள் கேள்வி பட்டது போல, இது சத்துக் குறைபாடினாலும் ஏற்படலாம்.