12 ல் குரு இருந்தால் என்ன பலன்?

குரு 12 ல் இருந்தால் பணவரவில் இடையூறு, வீண்செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6,8 க்கு அதிபதியாக இருந்து 12 ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12 ல் குரு சுபர் பார்வையுடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.

12 ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?


12ல் செவ்வாய்: நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேச விடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

11 ல் சனி இருந்தால் என்ன பலன்?

11ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரர், மருமகளையோ மருமகனை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது, குடும்பத்தில் விரிசல் வரும்.

10 ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

பத்தாவது வீட்டில் சூரியன் இருப்பது சாதகமான முடிவுகளைத் தரும். இது உங்களை அறிவார்ந்தவராகவும், பிரபலமாகவும் ஆக்குகிறது. எதிலும் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றியைத் தரும்.

பரிகார செவ்வாய் என்றால் என்ன?

குரு இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் நிர்தோஷம். அதாவது இவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். அதே போல் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த செவ்வாய்க்கும் பரிகார செவ்வாய் என்று பெயர்.

10 ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?


பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : பொதுவாகப் 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது அதிகமான நன்மைகளைத் தான் செய்யும். அதிலும், குரு போன்ற சுப கிரக பார்வை பெற்று இருந்தால்… ஜாதகர் மிக்க கடமை உணர்ச்சியைக் கொண்டு இருப்பார். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும்.

8 ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?


ஒருவருக்கு லக்னத்தில் இருந்து ...

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் 8-ஆம் பாவத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு வெறித்தனமான உத்வேகம் இருக்கும். செவ்வாய் இது போன்ற ஜாதகத்தில் பாதிப்படையாமல் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்வின் உச்ச நிலையை அடைவார். ஏராளமான சொத்துக்கள், அபரிமிதமான பண வரவு, ஆடை ஆபரணங்கள் என அவர் வாழ்வே ஒளிமயமானதாக இருக்கும்.

7ம் இடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

7ல் புதன் பகவான் இருக்கப் பெற்றவருக்கு நன்றாக படித்த, வசதியான மனைவி அமைவாள். உறவினர் முறையில் மனைவி இருப்பாள். அதோடு குடும்பத்தில் மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்

குரு சந்திர யோகம் என்றால் என்ன?


Guru Chandra Yogam,குரு சந்திர யோகம் ...

ஜாதகத்தில் குருவும், சந்திரனும் 1ம் இடத்தில் சேர்ந்திருப்பின் அதற்கு குரு சந்திர யோகம் என்று பெயர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 2ம் இடத்தில் குரு இருப்பின் சகட யோகமாகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 3ம் இடத்தில் குரு இருப்பின் எந்த யோகமும் இல்லை.

களத்திர தோஷம் எப்படி கண்டுபிடிப்பது?

அதாவது லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.

© 2020 Spirituality