247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்) சூரியனின் ஒரு பாத நகர்வு எனில் சூரியன் ஒரு வட்டம் அதாவது 360 திகிரி நகர 108 பாதங்கள் கடக்க வேண்டும்.
108 X 247 = 26, 676 ஆண்டுகள் ஆகும் 108 பாதங்கள் கடக்க . தமிழ் எழுத்துக்களில் 247 என்ற எண்ணில் எழுத்துக்களை வடிக்க வேண்டும் எனில் சூரியனின் இரண்டு முழு சுற்றை பார்த்தால் தான் முடியும். எனில் இரண்டு தடவை சூரியன் சுற்ற ஆகும் காலம் 26, 676 x 2 = 53,352 ஆண்டுகள்.
53, 352 ஆண்டுகள் சூரியன் சுற்றை கவனித்தால் ஒழிய ஒரு பாதம் சூரியன் நகர்வதற்கு 247 ஆண்டுகள் ஆகும் என தமிழ் எழுத்துக்களில் அந்த எண்ணை வடிக்க முடியும்.
தமிழ் வார்த்தைகள் சித்திர எழுத்துக்கள் என குறைந்த பட்சம் 53 ஆயிரம் ஆண்டுகள் சூரிய நகர்வை நம் முன்னோர்கள் அவதானித்து இருப்பார்கள் என்பது தெரிகிறது.
பிண்டத்தில் அண்டமாய்
அண்டத்தில் பிண்டமாய்
ஜோதியில் வேதியாய்
வேதியல் ஜோதியாய்
நீருள்ளே நெருப்பிருக்கும்
ரகசியத்தை அறியாதவர்
நெருப்புள்ளே நீர் இருக்கும்,
நீர் இருக்கும் நெருப்பினை
நீர் அறிவது எக்காலம்.
அந்தகார அந்தியில்
அந்தி சாயா சந்தியில்
முந்தி வந்து முந்தாமல்
முடிந்து போன மாயமே,
முட்டி வந்து முட்டையுள்ளே
முட்டி நின்ற முட்டமே
முட்டையுள்ளே இட்ட முட்டான்
இரண்டும் கெட்டான் ஆனதே
இரண்டும் கெட்டு நான்கு வந்து
ஐந்துமாகி போனதே…
ஐந்து இங்கு ஆறுமாகி,
ஆறு எங்கும் நீருமாகி,
நீரு உள்ளே நெருப்புமாகி,
நெருப்பும் நீரு ஆனதே!