வணக்கம். நாம் முத்திரை சேனலில் முத்திரைகளைப் பற்றிப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ‘அஞ்சலி முத்திரை’ (இதை ஆத்மாஞ்சலி முத்திரை என்றும் சொல்லுவாங்க).

இந்த அஞ்சலி முத்திரையை நீங்கள் செய்யச் செய்ய, யாருக்காவது நன்றி சொல்லாமல் விட்டிருந்தால் அந்த நன்றி அவர்களுக்குப் போய் சேரும்; அந்த நன்றி சொல்லக் கிடைக்கக்கூடிய பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், மனதுக்கு நிம்மதி கிடைப்பது, ஈ சக்தியை அதிகமாகக் கிரகித்துக் கொடுப்பது என்று நிறைய நல்ல விஷயங்களைச் செய்யக்கூடிய ஒரு மகா சக்தி வாய்ந்த முத்திரைதான் இந்த அஞ்சலி முத்திரை.
இது ஆத்மாவுக்கே நாம் அஞ்சலி செலுத்தக்கூடிய ஒரு முத்திரையாகும். அதனாலதான் ஆத்மாவை எப்போதுமே மதிப்போடு பார்த்துக் கொண்டே இருக்கக்கூடிய இந்த அஞ்சலி முத்திரையிலேயே ஆஞ்சநேயர் அப்படியே நிற்பார். இதை நீங்கள் பல கோவில்களில் விக்கிரகங்களிலும் பார்க்கலாம். நெஞ்சுக்கு நேராக கைகளைக் கூப்பி வணங்குவது என்பது ரொம்ப சிறப்பான விஷயம். நம் தமிழர்கள் அதனால்தான் இந்த ‘வணக்கம்’ என்ற முறையைக் கொண்டு வந்தார்கள்.
இதைச் செய்து பயனடையுங்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது இதைச் செய்யுங்கள். முடிந்தால் இரவு படுக்கும்போதாவது இதை ஒரு 5 நிமிடம் அல்லது குறைந்தபட்சம் 2 நிமிடமாவது செய்துவிட்டு நீங்கள் உறங்கினீர்கள் என்றால், வாழ்க்கையில் ரொம்ப பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருக்கும்.
வீடியோ பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், ஷேர் செய்யுங்கள், கமெண்ட் செய்யுங்கள். சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
குருவே நம, தந்தையே நம. நாம் மற்றொரு பதிவில் சந்திப்போம்.