முத்திரை என்ற ஒரு மகத்துவமான விஷயத்தை நாம் செய்வதன் மூலமாக, நமது தேகத்தில் ஆரோக்கியத் தன்மையையும், பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலையும் உள்வாங்கி, நம் வாழ்வை நல்வழிப்படுத்தக்கூடிய ஒரு அதிசயம் நிகழ்கிறது.

இத்தகைய சக்திவாய்ந்த முறையை சித்தர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அந்தச் சித்தர்களின் வழியில் வந்ததுதான் முத்திரைப் பயிற்சி.
இந்த முத்திரையை மருத்துவத்திற்காகச் செய்யும்போது முத்திரை வைத்தியம் என்றும், வழிபாட்டிற்காகச் செய்யும்போது முத்திரை வழிபாடு என்றும் சொல்கிறார்கள்.
நமது முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்றால், கோவில் விக்கிரகங்கள் முதல் பல்வேறு இடங்களிலும் முத்திரைகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும் வகையில் அவற்றைச் செதுக்கி வைத்தார்கள்.
நம்முடைய விரல்களில் இருக்கக்கூடிய பஞ்சபூத சக்திகளும், நம்முடைய ஆதாரச் சக்கரங்களும், விரல்களில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும், கைகளில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும் இவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் நாம் முறையாகப் புரிந்துகொண்டு, பயிற்சியின் மூலமாகச் செயல்படுத்தும்போது என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்துகொள்ளலாம்.
முத்திரைப் பயிற்சியை நாம் வீட்டிலேயே இருந்து, எந்த இடத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த இடத்தில் அமர்ந்து செய்யலாம்.
அவ்வாறு நாம் முத்திரையைப் பிடித்து அமரும்போது, அந்த ஆற்றலின் நிலைப்பாடு அதிகரித்து, நமக்குள் செயல்பட்டு, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இதற்கான ஒரு வெளிப்பாடுதான் இந்த முத்திரை சேனல்.
உங்களுக்குத் தேவையான முத்திரைப் பயிற்சிகளை வழங்குவதற்கான விஷயங்களை முழுமையாக இந்தச் சேனலில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.
நீங்கள் இந்தச் சேனலில் உள்ள வீடியோக்களை மட்டும் பார்த்து, அதன்படி பயிற்சி செய்தாலும் முத்திரைகளைப் பயிற்சி செய்யலாம்.
இதனுடன் சேர்த்து, இந்தப் பயிற்சிகளை இன்னும் தெளிவாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது வகுப்புகள் மூலமாகவோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், தொடர்ந்து என்னிடம் வந்து கற்றுக்கொள்ளலாம்.
அதற்கான WhatsApp நம்பரை வீடியோவின் Description-ல் கொடுத்திருப்பேன். நீங்கள் அந்த எண்ணை எடுத்துக்கொண்டு, அதன் மூலமாகத் தொடர்பு கொண்டு, அதற்கான விவரங்களையும் கட்டண விவரங்களையும் தெரிந்துகொண்டு பயிற்சியைக் கற்றுக்கொள்ளலாம்.
இந்த முத்திரைக்காகத் தனியாக ஒரு சேனலை உருவாக்குவதற்கான காரணம் என்னவென்றால், முழுக்க முழுக்க முத்திரைகளை மனிதன் உணர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான்.
பயிற்சி செய்யச் செய்ய, முத்திரைகளின் மகத்துவத்தை நீங்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.
தொடர்ந்து பாருங்கள். முத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன? அந்த முத்திரைகள் செயல்படுவதற்கான காரணம் என்ன? நமது உடல் எப்படி வேலை செய்கிறது? இந்தப் பயிற்சிகளைச் செய்வதன் மூலமாக நமக்கு எந்த அளவிற்கு நோய்த்தன்மையிலிருந்து விடுதலை பெற முடியும்? என்பதையெல்லாம் தொடர்ந்து விளக்குகிறேன்.
எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், முத்திரைகளைப் பிடிக்கும்போது உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் கிடையாது.
ஆனால், முத்திரைகளிலும் நாம் எந்த முத்திரையை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு கால அளவு இருக்கிறது.
ஏன் அந்தக் கால அளவில் செய்ய வேண்டும்? ஏன் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்? என்று விளக்கும்போது, உங்களுக்குத் தானாகவே புரிதல் ஏற்படும்.
உண்மையைச் சொல்லும்போது, அந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தெளிவான புரிதல் உங்களுக்கு வரும்.
முன்னோர்கள் ஆராய்ச்சி செய்த விஷயங்களை, நான் படித்த ஏடுகளிலிருந்தும், எனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களிடமிருந்தும் தெரிந்துகொண்டேன்.
அந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இதற்காக அனைத்து குருமார்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். நண்பர் ராஜேஷுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் படித்த புத்தகங்களையும், எனக்குக் கற்றுக்கொடுத்த அனைத்து குருமார்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
நீங்கள் தொடர்ந்து இந்தச் சேனலைப் பின்தொடருங்கள்.
வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள். சேனலை Subscribe செய்யுங்கள்.
குருவே நம! தந்தையே நம!
நாம் இன்னொரு பதிவில் சந்திப்போம்.
தமிழ் Disclaimer
இந்த வீடியோ ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. முத்திரைப் பயிற்சிகள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது. உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் தகுதியான மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
English Disclaimer
This video is for spiritual and general informational purposes only. Mudra practices are not a substitute for medical treatment. Please consult a qualified healthcare professional for any health concerns.