எவருக்கு எண்ணமெல்லாம் நசிந்து விடுகின்றனவோ, அவர்களுக்கு மோட்சம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கும். எப்பொழுதும் சகல எண்ணங்களையும் நசிக்கச் செய்கின்றார்களோ . . – அப்பொழுதே பிரம்ம சொரூபர்களாய் முத்தியை அடைகி றொர்கள். சகல எண்ணங்களையும் நசிக்கச் செய்ய ஓர் உபாயம் உண்டு.
அதைக் கவனமுடன் கவனித்து அதுபோல் அப்பியாசம் செய்து வந்தால் சகல எண்ணங்களும் ஒழிந்து பிரம்மானந்தப் பதவியை அடையலாம். எண்ணங்களிலேயே பிறவிகள் உண்டாகின்றன. எண்ணங்கள் இல்லாவிடில் பிறவியில்லை என்று உபநிடதங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
ஆதலால், சகல எண்ணங்களையும் தலையெடுக்க விடாமல் செய்வதே மனோநாசத்திற்கு முக்கியமான உபாயம். எவ்வாறெனில் நமக்கு எண்ணமெல்லாம் பிரம்ம தானத்திலிருந்து உண்டாகின்றன. இந்த நாபியான பிரம்மதானத்தை வெட்டவெளியாகப் பார்த்தபோது எண்ணங்களெல்லாம் உதித்த இடத்திலேயே ஒடுங்கும்.
எப்படியெனில் சென்னையை என மனம் நினைத்த உடனே “செ’ என்னும் எழுத்து நாபியிலிருந்து புறப்படும். அதி நாபியிலிருந்து வெளியே வரவிடாமல் உள்முகமாய் அந்த நாபியின் இடத்தை ஆகாய ரூபமாய் பார்த்தபோது வெட்டவெளியாய், அதாவது வெற்றிடமாய் இருந்தால் “செ” என்னும் எழுத்து உதித்த இடத்திலேயே ஒடுங்கும். முதல் எழுத்து ஒடுங்குவதால் அதன் பின் வரும் எழுத்துக்கெல்லாம் (எண்ணங்களெல்லாம்) ஒடுங்கிவிடும்.
சுவாசமும், மனமும் ஒன்றுவதால் மனம் நின்றால் சுவாசமும் நின்றுவிடும். மனத்தின் சுபாவகுணம் எண்ணங்களே ஆகும். சுவாசம் என்னும் காற்று நாபியில் பிறந்து, மூக்குத் துவாரங்களின் வழியாக ஓயாமல் வெளிவந்து, ஒவ்வொரு சுவாசமாய் இறந்து கொண்டேவரும். அப்போது சிறிய சிறிய உதவியற்றதும், ஞாபகமில்லாததுமாகிய அனைத்து எண்ணங்களும் நாபியிலிருந்து வெளியேவரும். சுவாசம் என்னும் காற்றில் மனதென்னும் எண்ணங்கள் அடிக்கடிப் பிறந்து பிறந்து மறைந்து நசிந்து கொண்டே வரும். இப்படிக் காற்று உருவகமாகயிருக்கும் மனத்தை நிறுத்த உபாயத்தைக் காண்போம்.
ஒரு புற்றிலிருந்து பாம்பானது, வெளிவரும் சமயத்தில் அப்புற்றின் அருகில் ஒரு மனிதன் நின்றிருந்தால் அவனைப் பாம்பு பார்த்தவுடன் பயந்து வெளிவராமல் புற்றுக்குள் போய்விடும். மறுபடியும் பத்து நிமிடங்கள் சென்ற பிறகு பாம்பானது புற்றிலிருந்து மறுபடியும் வெளியே வந்து எட்டிப் பார்க்கும். அம்மனிதன் விலகிப் போகாமல் நின்றிருந்தால், அப்பாம்பானது மீண்டும் புற்றுக்குள் போய்விடும். அம்மனிதன் புற்றுக்கருகிலிருந்து விலகிப்போய் விட்டால் பாம்பு வெளியே போய்விடும். அதுபோல நாபி புற்றென்றும், சுவாசம் (மூச்சு) பாம்பென்றும் கொண்டால், அந்தச் சுவாசம் என்னும் பாம்பில் அனைத்து வகையான எண்ணங்களும் அடிக்கடி உதித்து உதித்து இறந்துவிடும். இந்த எண்ணங்களையே மனம் என்று சொல்லுவார்கள். இந்த மனம் காற்றின் உருவமாக இருந்த போதிலும் அதன் குணத்தைக் காண்போம்.
எந்த எண்ணங்களும் இல்லாமல் வெற்று வெளியாக இருக்கும்பொழுது, கடைக்குப் போக வேண்டும். இன்னென்ன பொருட்களை வாங்க வேண்டுமென்றும், இப்படிப்பட்ட பலவிதமான எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதித்து உதித்து, நீர் அலைகளிலிருந்து உண்டாகிய நீர்க்குமிழிகள், திவாலைகள், நுரைகள், உடனுக்குடன் மறைந்து விடுவது போல், யிரக்கணக்கான உதித்த எண்ணங்கள் யாவும் மனம் என்னும் நீர்க்குமிழிகள் சுவாசம் என்னும் அலையில் பிறந்து, “சுவாசம்’ – என்னும் அலையிலேயே மறைந்து போகும்.
ப்பொழுது என்ன செய்யவேண்டுமென்றால் முன் சொல்லிய புற்றுக்குள் இருந்த பாம்பானது, வெளிவராமல் எப்படிப் புற்றுக்குள் அடங்கியிருக்கிறதோ அதுபோல், நாபி என்னும் புற்றிலிருந்து சுவாசம் என்னும் பாம்பு புறப்படும்போது அதிலிருந்து கடைக்குப் போக வேண்டும். இன்னென்ன பொருட்களை வாங்கவேண்டும் என்று எண்ணம் உதிக்கும்.
அப்போது முதல் எழுத்தாகிய க” என்னும் எழுத்துப் புறப்பட்ட உடனே நில் ? நீ எங்கே புறப்படுகிறாய் மனமே, புறப்படுப் பார்ப்போம் என்று கண்களை மூடி நாபியிடம் அகத்தினுள்ளே வெற்று வெளியாகப் பார்த்தோம் என்றால் எந்த எழுத்து நாபியிலிருந்து முதலில் பிறக்கின்றதோ, அவ்வெழுத்தைப் புறப்படாதவாறு நாபியினிடம் வெளிவெளியாகப் பார்க்க வேண்டும். அப்போது உலகத்தை எல்லாம் ஆளும் சக்கரவர்த்தி அரசர்களையெல்லாம் தம் ஆக்ஞுக்குள் நிறுத்துவது போல், இந்திரிய வியாபாரங்கள் யாவும் நின்றுவிடும்.
ஆதலால், அசுத்தமான மனத்தை ஆத்ம ஞானத்தினால் நாசம் செய்வதோடு மனம் வெளி விகாரங்களில் ஓடாமல் நின்று விடும். மனம் எப்பொழுது நின்று விடுகின்றதோ அப்போதே மூச்சு ஆடாமல் நின்றுவிடும். மூச்சு நின்றவுடன் காதினால் கேட்பது, மூக்கினால் வாசனை அறிவது, வாயினால் பேசுவது, கண்களால் பார்ப்பது, சீதோசணங்களால் அறிவது முதலாகிய இந்திரிய வியாபாரங்கள் ஓடுங்கி, தான்தானாய் கல் பொம்மையைப் போல் சமாதி நிலையில் நின்று பிரம்மானந்தத்தில் ஒருவிதமான சுகத்தில் உறைந்து இருப்பார். மூச்சு நாபியிலிருந்து பிறக்கின்றது. அதாவது தொப்புளிலிருந்து மூச்சு புறப்படுகின்றது. அந்தத் தொப்புளிலிருக்கும் இடமே சிதாகாசம்’ – என்றால் சிறிய ஆகாசம் வெளி என்று சொல்லப்படுகின்றது.
மேலே சொல்லிய மனத்தின் சொரூப உண்மை நிலைகளையெல்லாம் முன்னுள்ள பெரியோர்கள், பரம இராசர்களும், மற்றவர்களும் தெளிவாய் அறியும்படி எளிய வசனநடையில் கவிகளாகவும், பாடல்களாகவும், சுலோகங்களாகவும், சுருதிகளாகவும், மறைபொருளாகப் பாடிச் சென்றார்கள்.
மலிதர்கள் பெரும்பாலும் சாதாரண உரை தெரிந்து கொள்வார்களே ஒழிய, உள் இரகசியமான ஆழ்ந்த கருத்துகளை அறியமாட்டார்கள். மேற்கூறிய கவிகள், பாடல்கள், சுலோகங்கள், சுருதிகள் முதலானவற்றுக்கு எல்லாம் உள் கருத்தும், இரகசியங்களும் இந்நூலில் விரிவாகவும், தெளிவாகவும் சுலபமான வசனநடையில் எழுதி வெளியிடப்பட்டிருகின்றன. ஆதலால் இந்நூலில் சொல்லியது போல் பயிற்சி செய்து வரவேண்டும்.
அப்போது அந்தச் சுவாசம் நுரையீரலில் சிலநேரம் தங்கியிருக்கும். பிறகு அந்தச் சுவாசம் நுரையீரலிருந்து வெளிவரும். அப்போது யோகியானவன் கண்டத்திடம் மூடி விடுவதால் அந்தச் சுவாசம் மூக்குத் துவாரத்தின் வழியே வெளிவராமல் தொண்டைக்குப் பின்புறமாய் இருக்கும் இரப்பைக் குழியின் வழியாக 22 அடி நீளமுள்ள குடல் முழுமையும் அந்தச் சுவாசம் செல்லும்.
பிறகு அவ்விடத்திலிருந்து மூலாதாரம் என்னும் குதத்தினிடம் போய் அச்சுவாசம் அபானவாயுவாய் வெளியே போக ஆரம்பிக்கும். அப்போது யோகியானவன் அந்தச் சுவாசத்தை அபானவாயுவாகப் போகவிடாமல் இரண்டு பிண்டங்களையும் கெட்டியாய் இடுக்கிப்பிடியாக இழுத்துப் பிடிக்கவேண்டும். பின் அது வெளியே போகாமல் பின்புறமாக இருக்கும் முதுகெலும்பின் வழியாகப் போகும்.
முதுகெலும்பில் 33 எலும்புக் கூட்டுக்குள் படிப்படியாய் அமைக்கப்பட்டி ருக்கும் துவாரத்தின் மத்தியில் வெள்ளை நரம்பு ஒன்று இருக்கும். இந்நரம்பிற்கு முதுகுத்தண்டு (ஸ்பைனல் கார்டு) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
அது தாமரைச் செடியிலுள்ள சிறிய நூல்களைப் போன்று சிறு துவாடிங்களால் மேற்படி மூக்குத்துவாரங்களின் வழியாக உள்ளிழுத்து நிறுத்திய சுவாசமானது அப்பியாச முதிர்ச்சியினால் மெதுவாக அவ்வெள்ளை நரம்பில் ஏறிச் செல்ல வேண்டும். பிராணயாமம் செய்பவர்களுக்கு மட்டுமே முதுகெலும்பில் இருக்கும் வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின் வழியாகச் சுவாசம் மேலேறிச் செல்லும். இதற்குக் காகப்புசாண்டர் பாடலில்,
போமடாமுன் சொன்ன நரம்பினூடே பூரித்து ஆவி மதியும்சுடர்தாக்க மூன்றாம் ஆமடாபின்னையுந்தான் கீழே பாயும் அந்தரங்கந்தன்னைப் பார்க்க அடங்கிப்போகும் நாமடா வெளியில் திறந்து சொல்லி விட்டோம் நாதாந்த பரப்பிரம்மநாட்டந்தன்னை சன ஓம்சுடா விந்துந்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப் பாரே
என விவரிக்கின்றார். அதாவது, பூரித்த இரவி மதியும் சுடர் தான். மூன்றாம் என்றால் வலதுநாசி, இடதுநாசி இரண்டு நாசிகளிலும் உள்ளிழுத்து நிறுத்திய மூன்று சுவாசத்திற்கும் அதிகளவுக் கோபமுண்டாகும். அக்கினி சுவாலையைப் போல் கிளம்பி தஸ்தானத்திற்கு கீழ்நோக்கிச் சிங்கக் குட்டியைப் போல் அதிகவேகமாகப் பாய்ந்து முதுகெலும்பின் வழியாக மேலேறி மூலதானத்தைச் சேர்ந்து அங்குள்ள “விந்து: – என்று சொல்லும் அமிர்தத்தைத் தமது வெப்பத்தினால் உருக்கிக் கண்டத்தில் விழச் செய்து, தான் நாதாநந்தத்தில் ஐக்கியமாகி விடும்.
இதையடைய வேண்டுமாயின் திடச் சித்தம் உடையவனாக இருந்து பிராண யாமம் செய்து வரவேண்டும். யோகத் தன்மையினால் சுவாசம் முதுகெலும்பின் பின் வழியாக மேலேற்றிச் சகல நாடிகளையும் கிளப்பியவுடன் நாத சப்தங்கள் உண்டாகும்.
அப்போது சுவாசமானது, முன் சொல்லிய சுழிமுனை நாடியின் வழியாகச் சென்று பிரம்ம கபாலாத்தைத் தாக்கி அவ்விடத்திலிருந்து இச்சரீரத்திலிருக்கும் எழுபத்தி ஆறாயிரம் நாடிகளிலும் சென்று அந்தந்த நாடிகளை அவ்வவ்விடத்தில் தங்கவிடாமல் அந்தந்த இடங்களைக் கிளப்பி விடுவதால் நாடிகள் யாவும் தத்தம் இடத்தைவிட்டுக் கிளம்பி சர்ப்பம் சீறிக் கொண்டு ஓங்காரத்துடன் கிண்கிணி, சங்கு, வீணை, தாளம், கண்டா, பேரி, மிருதங்கம், மேளநாதங்கள் முதலான பத்து வகையான வாத்தியங்களும் நாடியின் வழியாகத் தொனித்துக் கொண்டு காதின் வழியாகச் சதாகாலமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
ஒரு கிழ அரசன், வேற்றரசன் போர்க்களத்திற்கு வந்தபோது கிழ அரசன் தன் குமாரனை அழைத்து அப்பா, குழந்தாய்! வேற்றரசன் நம் மீது படையெடுத்து வந்திருக்கின்றான். நீ சென்று அந்த வேற்றரசனை வெற்றி கொள்வாய் என அனுப்பினான். அக்குமாரனும் சென்று வேற்றரசனை வெற்றி கொண்டு திரும்ப வருகையில், அவன் தந்தையாகிய கிழவரசன் கேள்விப்பட்டுத் தன்னிடமுள்ள இராச்சியத்தை முன்கூட்டியே அனுப்பி அக்குமாரனை எதிர்கொள்வது போலாகும்.
நமது கடவுளானவர் அவனின் கடினத்தன்மையால் “பிராணாயாமம்” செய்து சம்சாரம் என்னும் சமுத்திரத்தைக் கடந்து கரையேற்றி விட்டது போல் ஆனந்தமடைந்து மேற்கூறிய பத்து வித நாதங்களையும் காதில் கேட்கும்படி முன்னால் அனுபவித்துத் தந்து பிறகு காட்சியைத் தருகின்றார்.
இந்தத் தேகமென்னும் ஆலயத்தில் மேற்கூறிய பத்துவித நாதங்களையும் கேட்டுக் கொண்டிருந்து, பிறகு அதைக் கடந்து பிரம்மக் கபாலத்திலிருக்கும் ஆகாச வடிவத்தில் மனம் ஐக்கியமாகி விடும்.
இவ்வாறு மனம் ஐக்கியமாகி விடுவதால், தன்னுடைய உண்மை வடிவம் தானாகவே நின்று கொண்டிருக்கும். அதாவது தானே தானாவான். முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அதிகப்பட்சம் இந்த ஓசையை யார் கேட்கின்றார்களோ? அவர்களே முக்தர்கள், அவர்களே பிரம்மஞானிகள். யார்?
ஒருவர் சகல எண்ணங்களையும் விட்டுச் சித்த விருத்தியடைந்து அந்நிய சாத்திரங்களிலும் சமத்த போகங்களிலும் இச்சை இல்லாதவர்களாய், “மாயை” – என்னும் பிரம்மவலையில் அகப்படாமல் சுயம்பிரகாசமான பிரம்ம ஞானத்தினால் “நிர்விகல்பச் சமாதியிலிருப்பவர்கள்” அதாவது உயிருடன் இருந்து கொண்டு அடக்கமடைவதைக் குறிக்கும் – இவ்வாறு இருப்பவர்களே சீவன் முக்தர்கள் ஆவார்கள்.
சுவாசம் மூக்கின் வழியாய் இழுத்து நிறுத்தியபோது, வெகுநாட்களின் பழக்கத்தால் அந்தப் பின்புறமாக மேலேறி தலையின் உச்சிக்குப் போய் அவ்விடத்தில் இருக்கும் “நாபி” – என்னும் தொப்புளுக்குச் சென்று அங்குள்ள குண்டலி சத்தியைக் கிளப்பிவிடும். அப்போது நெற்றியில் ஒளி காணப்படும்.
முன் கூறியது போல் யோகத்தைப் பெற விரும்புபவர்கள் சூரிய சந்திரகலைகளில் பிராணவாயுவைச் செலுத்தவேண்டும். அப்போது பிருதிவி (மண்), அப்பு (நீர்), தேயு (அக்கினி), வாயு (காற்று) என்னும் நான்கு தத்துவங்களும் விலகும். அப்போது அப்பிராணவாயு தத்துவமாகிய வெட்டவெளியை அடையும். அச்சமயம் சுவாசம் குறைந்து விடும். அக்காலத்தில் அமைதி (பந்தனம்) செய்யக்கூடும்.
அதாவது, பன்னிரண்டு அங்குல சுவாசத்தில் ஓர் அங்குல சுவாசம் நிறுத்தி, பதினோர் அங்குலம் ஆடச் செய்தால் இவ்வுலக இச்சையானது நீங்கிவிடும். இரண்டாம் அங்குலம் நிறுத்திப்பத்து அங்குலம் ஆடச்செய்தால், மனம் ஆனந்ததத்திற்கு ஆட்பட்டு ஞானமும், செல்வமும் பெருக்கும். மூன்றாம் அங்குலம் நிறுத்தி ஒன்பது அங்குலம் ஆடச் செய்தால் விவேகியாவான்.
நான்கு அங்குலம் நிறுத்தி எட்டு அங்குலம் ஆடச்செய்தால் தூர தேசத்தில் நடக்கும் விசேடங்களைச் சொல்வான். ஆறு அங்குலம் ஆடச் செய்தால் ஆகாயத்தில் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வான். ஏழு அங்குலம் நிறுத்தி ஐந்து அங்குலம் ஆடச்செய்தால், சரீரம் காயசித்தி அடையும். எட்டு அங்குலம் நிறுத்தி நான்கு அங்குலம் ஆடச்செய்தால், அணிமாதி சித்திகள் அடைவான்.
ஒன்பது அங்குலம் நிறுத்தி மூன்று அங்குலம் ஆடச்செய்தால், நவ கண்டங்களில் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் நிறுத்தி இரண்டு அங்குலம் ஆடச்செய்தால், ஓர் உடலை விட்டு மற்றொரு உடலுக்குள் பிரவேசிப்பான். பதினோர் அங்குலம் நிறுத்தி ஒரு அங்குலம் ஆடச்செய்தால், தனது ஆத்மாவில் ஐக்கியமாவான். பன்னிரண்டு அங்குலச் சுவாசமும் வெளியிடாமல் நிறுத்தினால் அந்தச் சுவாசம் உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட பரமயோகி இறப்பினை வென்று அன்னபானாங்கள் இல்லாமல் நீடுழிக் காலம் சமாதியில் நின்று ஆனந்தமாக இருப்பான். நல்ல இராச்சியமும், தர்மமுடைய தேசமும் என்று சொல்லக் கூடிய கோயில்களில் வசித்து, சத்திய நாடியைப் பிராணயத்தில் சொல்லியது போல், பிரம்மத்தண்டின் (முதுகெலும்பின்) மத்தியிலிருக்கும். வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின் வழியாகப் பிராணவாயுவைப் போகும்படிச் செய்து பிரம்ம மந்திரத்தில் நிறுத்தவேண்டும்.
அப்படி நிறுத்தினால் பிராணனுடைய அசைவிற்கு அழிவு ஏற்படுகின்றபோது, மனம் மிகவும் சாந்தியடைகிறது. அப்போது ஆகாயம் ஒன்றுமில்லாத இருப்பிடமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. பிராணவாயு, மனோவாயு இவ்விரண்டும் வசமானபோது எண்ணங்களெல்லாம் சமாதியில் அடங்கிவிடும். அப்போது மனம் புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களுடன் அழிந்துவிடுகின்றன. இவையெல்லாம் அழிந்தவுடன் ஆத்மா அமைதியை அடைகின்றது. அப்போது உயிர் சீவசொரூபியாக இருந்து முக்தியை அடைகின்றது. வாயு பிரம்ம மந்திரத்தில் எப்போது போகின்றதோ அப்பொழுது அல்லும் பகலும் நல்ல நிலையில் இல்லாமல் இருந்தால் காலத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
எதுவரை தலையின் உச்சிக்கு வாயு செல்கின்றதோ அதுவரையில் யோகிகளுக்கு ஆயுள் விருத்தியாகின்றது. தீர்க்கக் காலம் சமாதியை அடைந்து சித்தயோகி ஆகின்றான். பூர்வ மரணகாலத்தைத் தெரிந்து கொண்டு தலை உச்சியில் பிராணவாயுவை நிறுத்திக் காலனை வெல்லுகின்றான். தனக்குத் தேவைப்படும் போது பிராணனை விட்டு விடுகின்றான்.
இதுவே பரமநாடி எனவும் சொல்லப்படுகிறது. சுழிமுனை நாடிக்கு இடது பக்கத்திலிருப்பது இடைநாடி. இது இடதுநாடியில் பரவியிருக்கும். சுழிமுனை நாடிக்கு வலது பக்கத்திலிருப்பது பிங்கலைநாடி. இது வலது நாடியில் பரவியிருக்கும். நாடிகளில் அரசயிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நரம்புகளைப் போல் நமது சரீரத்தில் கிளைகிளையாய் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நாடிகளின் வழியாய் வாயு யோக அப்பியாசத்தால் கட்டப்பட்டிருக்கும்.
மனம் எங்கெங்கு உண்டோ ? அங்கங்கு வாயுவும் உண்டு. மனம் எங்கெங்கு இல்லையோ அங்கங்கு வாயுவுமில்லை என்பது போல் எந்த யோகியினால் பிராண வாயு கட்டப் படுகின்றதோ யாரால் மனம் கட்டப்படுகின்றதோ அவனாலே பிராணன் கட்டப்படுகின்றது. அமம், பிராணன் என்னும் இவ்விரண்டும் ஒன்றைக் கட்டினால் மற்றொன்றும் தானாகக் கட்டப்படுவது உறுதியாகும். மனத்திற்குப் பிராணசலனம் வாசனை. அவற்றில் ஒன்று நட்டமானாலும், இரண்டாவதும் உடனே நட்டமாகும் என்பது உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் அனைத்துப் பிறவிகளும் சிரத்தை எனும் பக்தியுடன் செய்யக் கூடிய பிராணயாம அப்பியாசத்தினால் அநாதியாய் வந்து கொண்டிருக்கும் எல்லா வாசனைகளும் நசித்து முக்தி பெறும் மார்க்கத்தை உண்டாக்கும். யோகநிலையில் எண்ணம் கொண்ட ஒருவன் தினக் கணக்குகளினாலும், மாதக்கணக்குகளினாலும் யோக சித்தியை அடைய வேண்டுமானால் எண்ணம் கொண்டால் சித்தியாகும்.
தத்துவ ஞானம் உடைய யோகிகள் பரமாத்மாவையும், கிரக சேத்திராதிகளையும், திரவியங்களையும், புத்திரர்களையும் கிரகிக்கின்றார்கள். அன்னபானாங்கள் முறையில் வழிபடும் ஞானிகள் ஆதரிக்கும் உத்தமர்கள், ஞானிகளின் புண்ணியத்தைப் பெறுகின்றார்கள். அவர்களைத் தூடித்துப் (தூடனம் செய்து) அரிய செயல்களையும் செய்பவர்கள். அவர்களின் பாபகர்மங்களைப் பங்கிட்டுக் கொள்கின்றார்கள். பரம தத்துவ ஞான வசிட்டனுக்கு அநேகப் பிறவிகளாக வந்து கொண்டிருக்கும் குடும்பப் பந்தத்தில் ஈடுபடுவதனால் காம, குரோதத் தோசங்களும், மோக லோபாதித் தோசங்களும் தினந்தினம் சந்திப்பது பழக்கத்திற்குட்பட்டதாகிறது.
மனம், கண்கள் முதலாகிய உறுப்புகள் ஒரு நிலையில் நிறுத்துவதே சிரேட்டமான தியானநிலை என்று முனிவர்கள் கூறுகின்றனர். இந்தத் தத்துவத்தில் மரணம் என்பதில்லை. மரணம் வரும்வரையில் வாசனை நம்மை விட்டுப் போகாது. வாசனை நம்மைவிட்டுப் போகும் வரை சித்தம் அணுகாது. சித்தம் அணுகும் வரையில் தத்துவ ஞானத்தை அடைய முடியாது.
தத்துவ ஞானம் உண்டாகும் வரையில் வாசனாசியம் என்னும் மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை என்ற மூன்று ஆசைகளும் நம்மை விட்டு நீங்காது. தத்துவ ஞானம், மனோ நாசம், வாசனாட்சயம் என்னும் இம்மூன்றும் ஒன்றையொன்று காரணத் தன்மையை அடைந்து சாதிப்பதற்கு எதுவரை சாதிக்க முடியுமோ அதுவரையில் தத்துவ ஞானமும் கைகூடும்.
ஆயுள் பாகம் காட்டுதல் நாம் உள்ளுக்குள் இழுக்கும் சுவாசம் நிசுவாசம் என்றும், வெளியில் விடும் சுவாசம் உசுவாசம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிசுவாசம், உசுவாசங்கள் குறைவுபடாமல் இருந்தால் சப்தாதி விசயங்களும், சரீர வியாபாரங்களும் எந்த விகாரத்திலும் மனம், புத்தி, சித்தம் அகங்காரத்தின் செயல்களும் குறைவுபடாமல் இருக்கும். இதுவே ‘லயம்” எனப்படும். இந்த லயமே யோகிகளுக்குப் பயனடையும் விதமாக அமையும். இந்த நிசுவாச, உசுவாசங்களே “அம்ச” – என்பர். இந்தச் சுவாசமானது, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் என்னும் ஏழு சக்கரங்களிலும் திரிந்து கொண்டு நம்முடைய ஆயுள் பாகத்தைக் காட்டுகின்றது.
1. மூலாதாரத்திற்கும் அதாவது, குதஸ்தானத்திற்கு அதிதேவதை கணபதி. அவருக்கு காலை 6 மணி முதல் 6. 40 நிமிடங்கள் வரையில் 600 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அதற்கு வயது நிறைந்து சுவாதிட்டானத்திற்குள் பிரவேசிக்கும்.
2. சுவாதிட்டானத்திற்கு அதாவது குய்ய ஸ்தானத்திற்கு அதிதேவதை பிரமன். அவருக்குக் காலை 6. 40 மணி முதல் 1. 20 மணி வரையில் 6000 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அதற்கு வயது நிறைந்து மணிப்பூரக நாபியான தொப்புளுக்குள் பிரவேசிக்கும்.
3. மணிப்பூரகத்திற்கு அதிதேவதை விஷ்ணு. அவருக்கு பகல் 1. 20 மணி முதல் இரவு 8 மணி வரையில் 6000 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அதற்கு வயது நிறைந்து அனாகத்திற்குள் அதாவது இருதயத்திற்குள் பிரவேசிக்கும்.
4. அனாகதத்திற்கு அதிதேவதை ருத்திரன். அவருக்கு இரவு 8 மணி முதல் காலை 2. 40 மணி வரையில் 6000 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அடிநாக்குகான நெஞ்சுக் குழிக்குள் பிரவேசிக்கும்.
5. விசுத்திக்கு அதிதேவதை மகேசுவரன். அவருக்கு காலை 2. 40 மணி முதல் 3. 46 மணி வரையில் 1000 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அதற்கு வயது நிறைந்து ஆக்ஞையுள் அதாவது நெற்றிக்குள் தோன்றும்.
6. ஆக்ஜஞைக்கு அதிதேவதை ஜீவன். அவருக்குக் காலை 3. 46 மணி முதல் 4. 53 மணி வரையில் 1000 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அதற்கு வயது நிறைந்து சகஸ்ராரம் என்னும் பிரம்ம கபாலத்திற்குள் (தலை உச்சிக்குள்) பிரவேசிக்கும்.
7. சகஸ்ராரத்திற்கு அதிதேவதை பரமாத்மா. அவருக்குக் காலை 4. 53 மணி முதல் 6 மணி வரையில் 1000 சுவாசங்கள் நடக்கும். நடந்தவுடன் அதற்கு வயது நிறைந்து மறுபடியும் மறுநாள் காலை 6 மணிக்கு மூலாதாரத்திற்குள் பிரவேசிக்கும்.
கடிகாரத்திற்குள் இருக்கும் முள்ளானது ஆடிக் கொண்டே மணியைக் காட்டுவது போல, இந்தச் சுவாசமானது முன் கூறிய ஏழு சக்கரங்களிலும் மேற்காட்டிய கணக்கைப் போல் நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் நடக்கும். ஒரு மணிக்கு அறுபது நிமிடங்கள் என்பதால் அறுபதையும் பதினைந்தையும் பெருக்கினால் தொள்ளாயிரம் சுவாசங்கள் நடந்து, நாள் ஒன்றுக்கு 24 மணிநேரத்திற்குள் அதாவது (900 ர 24 = 21, 600) இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாசங்கள் நடந்து கொண்டு நம்முடைய ஆயுள் பாகத்தைக் காட்டுகின்றது.
இறந்திடும் இருபத்தி ஒராயிரத்தி அறுநூறு பேரும் பிரதிதினம், நிமிடத்திற்கு 15 சுவாசங்களாய் நடந்து நாள் ஒன்றுக்கு இருபத்தி ஒராயிரத்தி அறுநூறு சுவாசங்கள் நடந்து நடந்து இறக்கின்றனர். கடவுளைக் காண மூலவாசியை மேலே . ஏற்றிச் சற்று நேரமும் ஓய்வில்லாமல் மூலாதாரத்தின் வழியாக நடந்து கொண்டிருக்கும் சுவாசத்தை முதுகெலும்பிலுள்ள வெள்ளை நரம்பின் துவாரங்களின் வழியாக மேலேயேற்றி உயர்வாகவும், தனக்குத்தானே பரமாகவுள்ள “சிதாகாசம்” என்னும் வெளியைத் தரிசிக்கவேண்டும்.
பிரதிதினம் நிமிடத்திற்கு 15 சுவாசங்களாக நடந்து நாள் ஒன்றுக்கு இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாசங்கள் நடந்து நடந்து இவர்கள் எல்லாரும் மூக்குத் துவாரங்களின் வழியாய் ஆடி ஒவ்வொருவராய் இறந்து கொண்டே வந்து கடைசியில் இத்தேகத்தை விட்டு நீங்கினால் கடவுளைக் காண நம்முடைய ஆயுள் பாகம் இந்தச் சுவாசமே ஒழிய சூரிய சந்திரர்கள் நடக்கும் நாட்களல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தனைக் கோடி சுவாசங்கள் என்று பிறப்பின் காலத்திலேயே பஞ்ச பூதங்களினால் உண்டான சரீரத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இப்பேர்ப்பட்ட மகா ரகசியமாகிய சுவாசத்தைத் தெரிந்து கொள்ளாமல் மனிதர்கள் சாதாரணமாகப் பேசும்பொழுது 12 அங்குலம் சுவாசம் வெளி வந்து 8 அங்குல சுவாசம் உள்சென்று 4 அங்குல சுவாசம் வெளியில் நட்டமாகப் போகிறது.
இவ்விதமாக ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 30, 40 ஆயிரக்கணக்கான சுவாசத்தைச் செலவழித்து விட்டு 60, 70, வருடத்திற்குள் மரணமடைகின்றார்கள். சகல பிறப்பு உயிரினங்களும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசங்கள் கணக்குக்கு இப்படியாக வைக்கப்பட்டிருக்கின்றது.
மனிதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வயது நூறாக இருந்த போதிலும், மேலே கூறப்பட்டது போல் சுவாசத்தை மனிதர்கள் விசேடங்களாகச் செலவழித்து விடுவதால் 80 வயதிற்கு மேல் உயிருடன் இருக்கமாட்டார்கள்.
குழந்தையானது பிறந்த மூன்றாம் மாதம் இறந்து விட்டால் அக்குழந்தைக்கு 19, 44, 000 பத்தொன்பது இலட்சத்து நாலாயிரம் சுவாசமே இருப்பதால் அவை செலவழிந்தவுடன் உயிர் போய்விட்டது என்று அறியலாம்.
ஒவ்வொரு சீவராசிகளும் எந்நாள் வரையில் பிழைத்திருக்க வேண்டுமோ அந்நாட்களுக்கு வேண்டிய சுவாசத்தைக் கடவுள் கணக்கெடுத்து அதற்குத் தக்கவாறு சுவாசத்தை ஏற்படுத்திச் சீவன்களைப் பிறக்கச் செய்து அனுப்பிவிடுகின்றான்.
இந்தச் சீவன்களைப் பரிட்சை செய்வதற்காகவே கடவுள் ஆயிரம் வருடங்களுக்கு வேண்டிய சுவாசத்தைச் சீவராசிகளுக்குக் கொடுத்துப் பிழைத்திருக்க அனுப்பிய போதிலும் இவர்கள் ஒவ்வொரு தினமும் ஒரு நிமிடமாவது ஓய்வில்லாமல் ஆயிரம் வருடங்கள் வரையிலும் மாயை சம்சார வாழ்க்கையில் வேண்டிய வேலைகளை மட்டும் செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் மோட்சம் அடைவதற்கான மார்க்கத்தை அடைய அரை நிமிடமே கடவுளை நினைத்து வணங்குகிறார்கள்.
ஆனால் இவர்கள் கடவுளிடம் எதை நினைத்து வேண்டுகிறார்கள் என்றால் நான் செய்யும் வியாபாரத்தில் நல்ல இலாபம் வரவேண்டுமென்றோ, என் வழக்கில் வெற்றியடைய வேண்டும் என்றோ, நான் கொடுத்த பணம் வட்டி முதலுடன் சரியாக வர வேண்டும் என்றோ, எனக்கு நல்ல சம்பவங்கள் நடைபெற வேண்டும் என்றோ, வாரிசுகள் பிறக்க வேண்டும் என்றோ, என் குடும்பத்திலுள்ளவர்களுக்கு யாதொரு வியாதியும் அணுகாமல் இருக்க வேண்டும் என்றோ இவ்வாறு அவரவருக்கு வேண்டியபடி வரங்களைக் கேட்கிறார்கள்.
ஆனால் மாயை சம்சாரத்தைக் கடந்து கடைத்தேறும் படியான வரத்தைக் கேட்கமாட்டார்கள். சம்சாரத்திலிருந்து கடைத்தேற வேண்டுமென்று கடவுளைக் கேட்பவர்கள் நூற்றில் ஒருவர் இருப்பது கூட மிகவும் அரிதாக இருக்கின்றது.
இப்படிப்பட்டவர்களின் கூத்துகள் யாவும் கடவுளுக்கு ஒரு வேடிக்கையாதலால் மனிதர்களுக்குள் மாயமான மக்களுக்கு விசேடமான ஆசைகளை உண்டாக்கி அந்த ஆசையால் அவர்களை மோகவலையில் ஆட்படுத்துகின்றார். தான் எல்லாருடைய பலவிதமான கூத்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
இவற்றை எல்லாம் பெண்களும், ஆண்களும் புரிந்து கொண்டு நாம் தினந்தோறும் என்ன கடமைகளைச் செய்கின்றோம் ? என யோசித்துச் செயல்பட வேண்டும். பின் இதற்காகவா பிறப்பெடுத்தோம்? என ஆழ்ந்த மனத்தில் யாரொருவன் யோசிக்கின்றானோ அப்படிப் பட்டவனைக் கடவுள் கருணை கொண்டு நினைக்கின்றான்.
நமதுகாலம் இதுவரை எதுவுமில்லாமல் போய்விட்டன என நினைத்து அவனது மனம் துடிதுடித்து மறுபடியும் தாயின் கர்ப்பத்தில் உதிக்காமல் இருப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ? அதற்கு உரியனவற்றைச் செய்யத் தொடங்குவான். ஆதலால் நாம் உலகத்தில் .ஏன் பிறந்தோம், பிறந்ததற்காக எதனை. அடைய வேண்டும் – என்று பெண்களும், ஆண்களும் யோசிப்பார்களே ஆனால் அவர்களுக்கு நல்ல அறிவு உண்டாகி மறுபிறப்பு வராதபடி அதற்கு வேண்டிய வழியைத் தேடிக் கொள்வார்கள். இதனை ஆலோசித்து உண்மைப்பொருளை உணர்ந்து அதுவாகவே மனத்திற்குப் புலப்படும்.
நீங்கள் இரவிலும், பகலிலும், சாப்பிட்டு முடித்துப் படுக்கும் போதும், சாப்பிடாமல் படுக்கும் போதும் இடது கைப் புறமாக வைத்துப் படுக்கவேண்டும். ஏனென்றால் நமது உணவுப் பையானது வயிற்றின் இடதுபுறத்தில் இருப்பதால் இடது பக்கம் சாய்ந்து படுக்க வேண்டும். அவ்வாறு படுப்பதனால் சாப்பிட்ட ஆகாரமெல்லாம் சரியாகச் செரிமானமாகி வயிற்றுக்கு யாதொரு சங்கடமில்லாமல் இருப்பதோடு சுவாசமும் வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கும். அதனால் ஆயுள் விருத்தியாகும்.
இதற்குக் காரணம் என்னவெனில் வலது நாசியில் இருக்கும் சுவாசம் 8 அங்குலமும், இடதுநாசியில் வரும் சுவாசம் 12 அங்குலமும் வெளியில் வரும். வலதுநாசியில் 8 அங்குல சுவாசம் வெளியில் வருவதால் ஒவ்வொரு சுவாசத்திலும் 4 அங்குலச் சுவாசம் கூடி வருகின்றது. அதனால் ஆயுள் விருத்தி அடைகிறது. இடதுபக்கம் சாய்ந்து படுப்பதால் சீரண சக்தியும், ஆயுள் விருத்தியும் உண்டாகிறது. சாப்பிட்டவுடன் வலது பக்கமாகக் கைவைத்துச் சாய்ந்து படுப்பதால் இரைப்பை வலதுகை ஓரமாய்ப் புரளும். அப்படிப் புரளுவதால் சாப்பிட்ட ஆகாரம் சீரணமாகாமல் உடலுக்குக் கெடுதியை உண்டாக்கும்.
அத்துடன் சுவாசம் 12 அங்குலம் நீளம் வெளியில் இடது நாசியில் ஓடும். அதனால் நீண்ட ஆயுளுக்கும் வாய்ப்புண்டு. சாப்பிட்டவுடன் வலது கையை அழுந்த ஒரு பக்கமாகப் படுக்கும்போது இவ்விரண்டு விதமான துன்பங்களும் ஏற்படும். இதனை ஒவ்வொரு மங்கையரும் அறிந்து கணவர்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விவரமாகும்.
இடது நாசியிலிருக்கும் சுவாசத்தை வலது நாசியில் மாற்ற வேண்டுமானால் இடது காலின் பேரில் வலது காலைச் சமமாக வைத்து உட்கார்ந்து கொண்டு, இடது கையைப் பூமியில் ஊன்றி வலது கால் பெரு நரம்பைக் கணுக்காலிடம் வலது கை நடு விரலால் அசைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
சூரிய நாடியில் அதாவது, வலது நாசியில் மாறி விடும். வலது நாசியில் இருக்கும் சுவாசத்தை இடது நாசிக்கு மாற்ற வேண்டுமானால் மேலே கூறியதுபோல் வலதுகாலின் மேல் இடது காலைச் சமமாக வைத்து வலது கையைப் பூமியில் ஊன்றி இடது கை நடு விரலால் இடது கால் பெரு விரல் பெரு நரம்பைக் கணுக்காலிடம் முன் அசைத்ததுபோல் அசைத்துக் கொண்டே இருந்தால் சந்திர நாடியில் அதாவது இடது நாசியில் மாறும்.
இவ்விரண்டும் மாறுமிடம் புருவ மத்தியாகிய நெற்றியில் தாமரைக் கொடியிலுள்ள நூலைப் போன்ற மிகவும் “தந்திரங்கள்” உண்டு. அதுதான் சந்திரநாடி, சூரியநாடி, சுழிமுனை நாடிகள் மூன்றும் கலக்குமிடமாகும். அவ்விடம்தான் சச்சிதானந்தம் என்ற உண்மை அறிவுடன் இருக்கும் ஆனந்தமிடமாகும். மேலும், உட்கார்ந்து, யோக தண்டமாகிலும் அல்லது தனக்குத் தகுந்த உயரமுள்ள மனையாகிலும் வலது அக்குளில் வைத்துக் கொண்டு அக்குளின் நரம்பு ஊன்றும்படி அழுத்தினால் சில நிமிடங்களில் வலது நாசியிலிருக்கும் சுவாசம் இடது நாசிக்கு மாறும். அல்லது அக்குளுக்கும், முழங்கைக்கும் மத்தியிலும் வைத்து நரம்பை ஊன்றினாலும் மாறும். சுவாசம் எப்பொழுதும் சூரிய நாடியில் இருப்பதற்காகவே யோகிகள் எப்பொழுதும் யோக தண்டத்தை தமக்கு இடது அக்குளில் வைத்திருக்கிறார்கள்.
சுவாசத்திற்கு வாசி என்றும் பெயருண்டு. இந்த வாசியை மாற்றுவதனால் அந்த யோக தண்டத்திற்கு “வாசிக்கோல்” – என்றும் பெயர் வந்தது. சாதாரணமாய் உட்கார்ந்திருக்கும் போதும், சந்திர நாடியில் இருக்கும் போதும் சந்திர நாடியில் இருக்கும் சுவாசத்தைச் சூரிய நாடியில் மாற்ற வேண்டுமானால் இடது கையைப் பூமியிலூன்றி இடது பக்க முதுகை மட்டும் சுவரில் சாய்த்துக் கொண்டிருந்தால் சந்திர நாடியிலிருக்கும் சுவாசம் சூரிய நாடிக்கு மாறும். சூரிய நாடியிலிருக்கும் சுவாசம் சந்திர நாடிக்கு மாற்ற வேண்டுமானால் வலது கையைப் பூமியிலூன்றி வலது பக்க முதுகை மட்டும் சுவரில் சாய்த்துக் கொண்டிருந்தால் சூரிய நாடியிலிருக்கும் சுவாசம் சந்திரநாடிக்கு மாறும்.
படுக்கையில் சூரியநாடியிலிருக்கும் சுவாசத்தைச் சந்திரநாடிக்கு மாற்றவேண்டுமானால் வலதுபக்கத்தில் ஓரே பக்கமாகப் படுத்து வலதுகையைத் தலைக்குக் கீழ்வைத்துக் கொண்டிருந்தால் சுவாசம் சூரிய நாடியிலிருந்து சந்திர நாடிக்கு மாறும். சந்திர நாடியிலிருக்கும் சுவாசத்தைச் சூரியநாடிக்கு மாற்றவேண்டுமானால் இடதுபக்கத்தில் ஒரே பக்கமாகப் படுத்து இடதுகையைத் தலைக்குக் கீழ்வைத்துக் கொண்டிருந்தால் சுவாசம் சந்திரநாடியிலிருந்து சூரியநாடிக்கு மாறும்.
வழியில் நடக்கும்போது குடை, துண்டு இவற்றில் எதுவாயினும் பந்தாகச் சுற்றி இடது அக்குளில் வைத்துக் கொண்டு சென்றால் சுவாசமானது சூரிய நாடியிலேயே இருக்கும். சந்திர நாடியில் இருக்க வேண்டுமானால் மேலே கூறியதுபோல் குடை, துண்டு இவற்றில் ஏதுவாயினும் பந்தாகச் சுற்றி வலது அக்குளில் வைத்துக் கொண்டு சென்றால் சுவாசமானது சந்திர நாடியிலேயே இருக்கும். இந்த மகா இரகசியங்களை முன் சொல்லியதுபோல் சிலகாலம் செய்து வந்தால் நிமிடத்திற்கு இரண்டு மூன்று முறை சுவாசத்தை அந்தந்த இராசிக்கு மாற்றலாம்.
முன் சொல்லியதுபோல் அந்தந்த நாட்களில் காலை 4 மணி முதல் 6 மணி வரையில் சுவாசம் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். இதில் சொல்லிய சுவாசத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எவ்வித ஆபத்துக்களுக்கும் இடமில்லாமல் எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள். சுவாசமானது சர்வ உயிர்களின் தேக மத்தியில் பிராணவாயுவிலிருந்து அனுபவப் பூர்வமாக அதாவது, உசுவாச நிசுவாசங்களாய் ஊர்த்துவ முகமாகத் தலை கீழாய் நாபியிலிருந்து புறப்பட்டு மூக்கின் ரந்திரங்களின் வழியாக மேலும் கீழும், கீழும் மேலுமாக ஆடிக் கொண்டிருக்கும். அபானவாயு பூரக வடிவமாகவும், அதோமுகமாகவும் (கீழ்ப்புறமாக) திரிந்து கொண்டிருக்கும். இவ்விரண்டிற்கும் மத்தியில் இருப்பதே ஆத்மாவாகும்.
மனிதனுடைய நாசியிலிருந்து வரும் சுவாசம் இடகலை, பிங்கலை, சுழுமுனை என மூன்று வகைப்படும். இவற்றுள், இடகலை என்பது சந்திரகலை. இது பெண். இடது பக்கநாசியிலிருந்து வருவதாகும். பிங்கலை என்பது சூரியகலை. இது ஆண். வலப்பக்கத்து நாசியிலிருந்து வருவதாகும்.
சுழிமுனை என்பது அலி. அக்கினி என்றும் பெயர்பெறும். இது சுவாசம் ஒரு பக்கத்திலிருந்து அடி. மூலத்தில் பறந்து மறு பக்கத்திற்கு வரும்போதே இப்பெயர் பெறும். எருதுக்கு மூக்கணாங் கயிற்றிலிருந்து இயங்குவது போல சரமும் மனிதனுடைய நாசியின் வழியே நின்று நல்வழிவினை, தீ வழி வினைக்குத் தக்கவாறு பிறந்து, இறந்து, இயங்குமாறு செய்யும். இதைக் குரு முகூர்த்தத்தில் அறிந்து அறநெறியில் நிற்பவரே பெரியோர் ஆவார். அதனை அறியாதவர் ஊமையாவர்.
எப்போதும் சூரியன் உதிக்கும் முன் ஐந்து நாழிகை தொடங்கி நாசியிலிருந்து சுவாசம் வந்து பன்னிரண்டு அங்குலம் வெளியே செல்லும். அதிலே நான்கு அங்குலம் வெளியே நின்று விட, மிஞ்சிய எட்டு அங்குலம் உள்ளே போய்விடும். இப்படியே அறுபது நாழிகை அதாவது 24 மணி கொண்ட ஒருநாளில் இருபத்தியோராயிரத்து அறுநூறு சுவாசம் விடப்படும். அதிலே ஏழாயிரத்து இருநூறு சுவாசம் வெளியிலே செல்ல எஞ்சிய பதினான்காயிரத்து நானூறு சுவாசமும் உள்ளே சென்று விடும். இந்தச் சுவாசம் ஒவ்வொரு நாசியிலும் ஐந்து நாழிகைக்கு ஒரு முறை மாறிமாறி ஒடும்.
ஞாயிறு, செவ்வாய், சனி என்னும் நாட்களிலே உதயத்துக்கு ஐந்து நாழிகைக்கு முன்னே தொடங்கிய பிங்கலக்கலை சூரியகலை ஓட வேண்டும். திங்கள், புதன், வெள்ளி என்னும் நாட்களிலே இடகலை என்னும் சந்திரகலை அப்படியே ஓடவேண்டும். வியாழக் கிழமையிலே வளர்பிறைக்குச் சந்திரகலையும், தேய்பிறைக்குச் சூரியகலையும் தொடங்கி ஓடவேண்டும். இம்முறை தவறியோடினால் துயரமும், மரணமும் சம்பவிக்கும்.
காலை 4 மணி முதல் 6 மணி வரையில் மேற்கூறிய தினங்களில் இடதுவலது நாசிகளில் சுவாசத்தை நிறுத்தி அப்பியாசம் செய்து வந்தால் மோட்சம், வீடுபேறு, செல்வம். குறைவில்லாமல் கிடைக்கும். சுவாசத்தைச் சூரியநாடியில் நிறுத்தி எல்லாக் காரியங்களையும் செய்யும்போது எல்லாமே கைகூடும்.
சுவாசம் – இது வலது, இடது நாசிகளில் ரேசக பூரகமாய் நடந்து கொண்டிருக்கும். இதற்குச் சூரியநாடி, சந்திரநாடி என்றும், சிவன் சத்தி என்றும், இடைப்பிங்கலை என்றும் பெயர். வலது நாசியிலிருந்து வரும் சுவாசம் சூரியநாடி சிவன். இடது நாடியிலிருந்து வரும் சுவாசம் சந்திரநாடி சத்தி இடநாடி என்றும் சொல்லுவர். சுழிமுனை நாடியென்றால் மூலாதாரம் முதல் பிரம்ம கபாலம் (மஸ்தகர் வரையிலும் திரிந்து கொண்டிருக்கும் நாடியாகும்.
சுவாசத்தைச் சூரியநாடியில் வைத்துக் கொண்டு சென்றால் சகல காரியங்களும் சித்தியாகும். யோகியானவர்கள் சிறிதும் இடைவிடாமல் யோக மார்க்கத்தைச் செய்து கொண்டு இரவும் பகலும் சுவாசத்தைச் சூரிய நாடியிலேயே வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு சில காலத்திலேயே யோகம் சித்திக்கின்றது.
சுவாசத்தைச் சூரிய நாடியிலேயே வைத்துக் கொண்டிருந்தால் ஆயுள் விருத்தியாகும். இதற்குக் காரணம் யாதெனில் வலது நாசியிலிருந்து வரும் மூச்சுச் சுவாசம் எட்டு அங்குலமும், இடது நாசியிலிருந்து வரும் மூச்சுச் சுவாசம் பன்னிரண்டு அங்குலமும் வெளியில் வரும். வலது நாசியில் எட்டு அங்குலம் சுவாசம் வெளியில் வருவதால் ஒவ்வொரு மூச்சிலும் நான்கு அங்குலம் சுவாசம் கூடி வருகின்றது. அதனால் ஆயுள் விருத்தியாகிறது.
அதாவது, நிமிடத்திற்குப் பதினைந்து மூச்சாக, பிரதிதினம் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் மூக்குத் துவாரங்களின் வழியாக நடந்து நடந்து கழிந்து கொண்டே வரும். இருபத்தி ஓராயிரத்து அறுநூறு மூச்சுகளும் இந்தச் சரீரத்திலிருந்து ஒவ்வொன்றாக அறுபட்டு இறந்து கொண்டே வந்தால் உண்மைப் பொருளைக் கண்டறிந்து கொள்ளலாம். மறவாதபடி இமைச் சிமிட்டும் நேரங்கூட ஓயாமல் ஆடி மூலாதாரத்தின் வழியாக நடக்கும் சுவாசம் என்னும் வாசியை முதுகெலும்பின் வெள்ளை நரம்பின் சிறிய துவாரத்தின் வழியாகப் பிரம்ம கபாலமான உச்சிக்கேற்றி உயர்வாயிருந்து தானாக நடந்து கொண்டிருக்கும் மெய்ப்பொருளை அறியமுடியும்.
ஆதலால் சுவாசம் என்னும் நூல் நமது சரீரத்திலிருந்து அறுபடும் முன்பே நாமெல்லோரும் கவனமாக இருந்து யோக சித்தி பெறவேண்டும்.
கீழே கொடுக்கப்படும் தகவல்கள் சரநூலிருந்து நான் படித்து மகிழ்ந்ததை பகிர்ந்துள்ளேன். தாங்கள் சரநூலை பெற்று நீங்களும் படித்து மகிழுங்கள். சரநூல் ஆன்லைன் புத்தகத்தை தேடினீர்கள் என்றால் கிடைக்கும். நன்றி சர நூல் எழுதி என்னைப் படிக்க வைத்து உணர வைத்த அனைத்து குருமார்களுக்கும் நன்றி! (பதிப்பாசிரியர் : முனைவர் ஜெ.ஜெயவாணிஸ்ரீ, வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்)
அதிலும் யோகமே ஞானம் அடைவதற்கான சிறந்த வழியாகும். யோகமின்றி ஞானத்தை அடையமுடியாது. இத்தகைய யோகசாதனையை அடைவதற்கு வாசி(மூச்சு)யை வயப்படுத்தவேண்டும். பொதுவாக நாசியை, வாமகதியான இடைநாசி சந்திரன் அதுவே யமுனாநதியாகவும், தட்சிணகதிய2ன பிங்களநாடி சூரியன் அதுவே கங்காநதியாகவும்,. மத்திமகதியான சுழிமுனைநாடி அக்கினி அதுவே சரசுவதி நதியாகவும் ஒப்பிடுவர்.
இந்த மூன்றும் கூடிய சங்கமமே திரிவேணி சங்கமம் என்றும், திரிகூடம் என்றும் அழைப்பர். உசுவாச, நிசுவாச, ரூபவாயுவும் மனத்தோடு கூடி திரிகூட தேசத்திலே செறிந்து திடப்படுத்தி அதன் மேல் திரிகோண வழியாகின்ற சுழிமுனை நாடி மார்க்கத்திலே பிரவேசிக்க வேண்டும்.
வாமகதி என்றால் வலமிருந்து இடமாக எழுதுவது என்று பொருள். அதாவது இடகலை நாசியை வாமகதி என்று அழைப்பார்கள். வாமகதி என்பது உற்பத்தியாவது வலப்பக்கம். அது வலமிருந்து இடமாக ஓடும். யமுனை நதி வடக்கு பக்கத்திலிருந்து உருவாகிறது.
ஒரு கதை வழங்குகிறது. சில காலங்களுக்கு முன் பாண்டிய நாட்டில் ஒரு வேளாளன் தன் சிறுவயதிலேயே தன் தாய்தந்தையரால் கல்விக் கற்க அனுப்பப்பட்டான். கல்வியில் போதிய அறிவுத்திறன் பெறாமல் இருப்பதைக் கண்ட அவனின் தந்தையார் ‘அட துட்டனே!
பள்ளிக்குப் போவது பிள்ளைக்கு அழகு” என்பது அறிந்த உனக்கு ஆசிரியரின் ஒரு மொழியேனும் மனத்தில் பதியவில்லையா ?” என மன சஞ்சலித்துக் கொண்டார். இவனும் மன உறுதியுடன் தந்தையின் இசைவிற்காகப் பள்ளிக்குச் சென்று குருவின் துணையால் அவர் உபதேசிக்கும் அனைத்தையும் கைவிடாமல் கற்று அதனைச் சாதிக்க வேண்டுமென்று தனக்குள் தீர்மானித்தான்.
அப்போது ஆசிரியர் எப்போதும் போல் பிள்ளைகளை வாசிக்கச் செய்வார். அத்தினம் இப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டே கணேசா! என்று கூறி தன் ஆசனத்தில் அமர்ந்தார்.
அவ்வாக்கியத்தையே தனக்கு உபதேசமாகக் கொண்டு இரவும், பகலும், நினைவிலும், கனவிலும், வைராக்கியமான மனத்தால் தியானித்து வந்தான். ஸ்ரீ விநாயகப் பெருமான் மனமிரங்கி சன்னியாசி வேடம் தரித்து இப்பிள்ளையைத் தன்னருகில் அழைத்து, “பிள்ளாய்! உனக்கு என்னவேண்டு”*மென்று வினவினார்.
அப்பிள்ளை நீ யார்? உமக்கு என் மீது இவ்வளவு கருணை உண்டாவதற்குக் காரணம் யாதென வினவினான். அதற்கு ஸ்ரீ விநாயகப் பெருமான் தன் உருவம் பூண்டு யான் கணநாதன். என்னையே உன் திருவாக்கினால் அருளினாய் என்றார். அப்படியானால் எனக்கு, ‘அழியாக்கலை” வேண்டுமெனக் கேட்ட கணநாதனும் மிகுந்த அன்புகூர்ந்து, உமையை நோக்கி தியானித்துக் கொண்டிருந்ததால் உனக்கு அருளுவார்! எனஉரைத்து மறைந்தார்.
அதுமுதல் அப்பிள்ளையார் உமையம்மையை நோக்கி அரிய தவம் புரிய, அப்பிள்ளைக்கு முன்தோன்றி, வேண்டுவதைக் கேள் என உரைத்தார். தனக்கு ஞானக்கலையை அருளுமாறு கேட்க, அக்கணமே யான் சொல்லும் நூல் முழுவதும் கேட்பாயாயின் நீ விரும்பிய ஞானக்கலை கிடைக்கும் என உபதேசித்து அருளினார். அதனைத் திருவுளம் பற்றக். கேட்டு நின்றார். இவ்வடிப்படையில் சரநூல் ஆக்கம் பெற்றள்ளது என்ற வழக்குமுள்ளது என்பதை இந்தக் கதையின் (இந்தக் கதை ஒரு சுவடியில் இருந்ததாக கூறுவர்) குறிப்பினால் அறியமுடிகிறது.
அவனி என்றால் பூமி என்று பொருள். சரியை என்பது அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.
கிரியை என்பது மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர்.
யோகக் கலை, அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி. யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.
சரியைத் தொண்டுகள் : ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவை சரியைத் தொண்டுகளாகும்.
சரியையின் வகைகள் சரியையில் ஞானம் – சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது. சரியையிற் சரியை – சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள். சரியையிற் கிரியை – ஒருமூர்த்தியை வழிபடல். சரியையில் யோகம் – வழிபடும் கடவுளையும் சிவனையும் தியானித்தல்.
கிரியைத் தொண்டுகள் கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் [1]
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.
கிரியையின் வகைகள்
கிரியையிற் சரியை – பூசைப் பொருட்களைத் திரட்டல். கிரியையிற் கிரியை – புறத்தில் பூசித்தல். கிரியையில் யோகம் – அகத்தில் பூசித்தல். கிரியையில் ஞானம் – மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
யோகத்தின் எட்டு அங்கங்கள் : அட்டாங்க யோகம் 1. சமாதி (பதஞ்சலி) (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல் 2. இயமம் ( 5′ பின்பற்றவேண்டியவை /எடுத்துக்கொள்ளத் தக்கவை) மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் . 3. நியமம் (5 கவனிக்கவேண்டியவை) புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி. 4. ஆசனம், இதன் பொருள் அமர்தல் அல்லது உடலின் நிலை. 5. பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்)ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும். 6. ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல். 7. தாரானை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல். 8. தியானம்(தியானம்) தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
கீதையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , முதல் 6 பாகங்ககள் கர்ம யோகமாகவும், நடுவில் 6 பக்தி யோகமாகவும், மற்றும் கடைசி 6 ஞானமாகவும் வகைப்படுத்தியுள்ளார். ஆசனம் என்றால் உடலின் நிலை அல்லது தோரணை என்று பொருள். அஷ்டாங்க யோகாசனா செய்ய நான்கு வகையான நிலைகள் உள்ளன.
ஞானம் ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.
குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள்.
ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை ‘சீவன் முத்தி்’ எனப்படும். ‘சீவன்முத்தர்’ உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர்.
உள்ளக அல்லது வெளிப்புற படிக்கட்டுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி, செங்கோணமாக வளைந்திருக்கும் சதுர மற்றும் செவ்வக வடிவங்களில் அமைந்துள்ள படிக்கட்டுகள் சிறந்தவையாகும்..
படிக்கட்டுகள் வாஸ்து என்றால் என்ன? பண்டைய இந்து கட்டிடக்கலை வாஸ்து சாஸ்திரம் படிக்கட்டுகளைக் கட்டுவதில் பல விதிகளைப் பரிந்துரைக்கிறது. கட்டுமானத்தின்போது படிக்கட்டு வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்துவது பொதுவாக எளிதான நடமாட்டத்திற்கும், குறிப்பாக வீட்டில் நேர்மறையான ஆற்றல் பாய்வதற்கும் வழிவகுக்கிறது. இது பெரிய அல்லது சிறிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
வாஸ்து விதிகளின்படி ஒரு படிக்கட்டு அமைப்பில் இருக்க வேண்டிய படிகளின் எண்ணிக்கை படிக்கட்டு அமைப்பில் உள்ள படிகளின் எண்ணிக்கை எப்போதும் ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்: 15, 17, 19, அல்லது 21 போன்ற ஒற்றைப்படை எண்களையே தேர்ந்தெடுக்கவும். எண்ணிக்கை ஒருபோதும் ‘0’வில் முடிவடையக் கூடாது. ஏன் என்றால், ஒரு சராசரி மனிதர் படிக்கட்டுகளில் ஏறும்போது முதலில் தனது வலது காலைக் வைக்க முனைவார். படிக்கட்டுகளின் இறுதியில் அவர் தனது வலது காலைக் கீழே வைப்பதில் முடிவடைய வேண்டும். இது படிக்கட்டுகளில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான படிகள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
வாஸ்துவில் படிக்கட்டு அமைப்பின் திசை வாஸ்துவின் படி, படிக்கட்டுகள் அமைக்க தென்மேற்கு திசை சிறந்தது.
வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கான வாஸ்து வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கு, தென்மேற்கு பகுதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் நம்புகின்றனர். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் அடுத்த சிறந்த தேர்வுகளாக இருக்கும். இந்த நிலையில், படிக்கட்டுகள் வடக்கிலிருந்து தெற்குநோக்கி அல்லது கிழக்கிலிருந்து மேற்குநோக்கி அமைக்கப்பட வேண்டும். உள்ளக படிக்கட்டுகள் இடத்தின் மையத்தில் இருக்கக் கூடாது.
வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கான வாஸ்து வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும்போது, வாஸ்துவின்படி சிறந்த திசைகள் பின்வருமாறு:
வடமேற்கு, வடக்கு நோக்கி.
தென்கிழக்கு, கிழக்கு நோக்கி.
தென்மேற்கு, மேற்கு நோக்கி.
தென்மேற்கு, தெற்கு நோக்கி.
வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ, வடக்கிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கக் கூடாது. மேலும், நுழைவாயிலுக்கு முன் அதன் அருகில் ஒட்டி அமைக்கப்படும் படிக்கட்டுகள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
படிக்கட்டுகள் வாஸ்துவை பாதிக்கக்கூடிய மற்ற காரணிகள்:
படிக்கட்டுகளின் அளவு: படிக்கட்டுகள் மிக பெரிய அல்லது மிகச் சிறிய அளவினால் வாஸ்துவை பாதிக்கக்கூடும். அதற்குப் பதிலாக, நடுத்தர அளவினுடைய படிக்கட்டுகள் நல்லதாகக் கருதப்படுகின்றன.
படிக்கட்டுகளின் வடிவம்: படிக்கட்டுகள் சதுர அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். மற்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் வாஸ்துவுக்கு எதிராக இருக்கக்கூடும்.
படிக்கட்டுகளின் எண்ணிக்கை: படிக்கட்டுகளில் ஒற்றைப்படை எண்கள் (15, 17, 19, 21) மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஜோடிக் எண்கள் வாஸ்து சாஸ்திரத்தில் பரவலாக துறுக்கப்பட்டு வருகின்றன.
வண்ணம் மற்றும் பொருள்: படிக்கட்டுகள் எந்த வகையான வண்ணம் அல்லது பொருளில் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் வாஸ்துவுக்கு முக்கியமாக இருக்கலாம். பழைய அல்லது மரபணு கலவைகள் வாஸ்துவிற்கு ஏற்றதாக கருதப்படுகின்றன.
சூழலியல் காரணிகள்: படிக்கட்டுகள் அமைக்கப்படும் இடத்தில் சூழலியல் காரணிகள் (பருவநிலை, நிலப்பரப்பின் வகை) முக்கியமானவை. அதற்கேற்ப அமைக்கப்படாத படிக்கட்டுகள் சிரமங்களை உருவாக்கலாம்.
திசை மற்றும் இடம்: படிக்கட்டுகள் அமைக்கப்படும் திசை மற்றும் இடம் வாஸ்துவின்படி சரியானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறான திசைகளில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தவிர்க்கப்படும்.
சாதனங்கள் மற்றும் பொருட்கள்: படிக்கட்டுகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் பொருட்கள் வாஸ்துவுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இந்த காரணிகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் படி படிக்கட்டுகளின் செயல்திறனைப் பாதிக்கக்கூடும்.
படிக்கட்டுகள் வாஸ்து நெறிமுறைகளைச் செயல்படுத்தும் போது, கீழ்க்காணும் காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்:
வாஸ்துவிற்கு இணக்கமான படிக்கட்டுகளின் பார்வைத் தெளிவு: உங்கள் விருந்தினர்களின் நேரடி பார்வைக்கு புலப்படாத வகையில் உள்ளக படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும். படிக்கட்டுகளின் தொடக்கத்திலும் முடிவிலும் கதவுகளை அமைப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.
வாஸ்துவிற்கு இணக்கமான படிக்கட்டு அமைவிடம்: மேல் தளத்தை குத்தகைதாரருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், பிரதான நுழைவாயிலுக்கு முன்பாகப் படிக்கட்டுகள் இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் நிதி இழப்பு ஏற்படும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
படிக்கட்டு தொடங்கும் இடம்: வீட்டிற்குள் உள்ள படிக்கட்டுகள் சமையலறை, ஸ்டோர் ரூம் அல்லது பூஜை அறையிலிருந்து தொடங்கவோ அல்லது முடிவடையவோ கூடாது. அடித்தளம் அல்லது நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டுகள் மேல்தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளுடன் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது.
படிக்கட்டு வாஸ்துவின் படி படிகளின் திசையமைவு
உங்கள் படிக்கட்டு அமைப்பில் உள்ள படிகள் செல்லும் திசை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆகையால், படிக்கட்டுகளின் திசையமைவு மிக முக்கியமாக கருதப்படுகிறது மற்றும் படிக்கட்டு வாஸ்து விதிகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
வாஸ்து விதிகளின்படி, படிக்கட்டுகள் மேலேறிக்கொள்ளும் போது அது எப்போதும் கடிகார இயக்கத் திசையில் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில், படிக்கட்டுகளைப் பயன்படுத்துபவர் வடக்கிலிருந்து தெற்கே அல்லது கிழக்கிலிருந்து மேற்கோச் செல்ல வேண்டும். கடிகார திசைக்கு எதிராக அமைக்கப்படும் படிக்கட்டுகள் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியதாகக் கருதப்படுகின்றன.
வாஸ்துவின் படி படிக்கட்டு வடிவம் வாஸ்து படி, உள்ளக அல்லது வெளிப்புற படிக்கட்டுகளுக்கு செங்கோணமாக வளைவுடன் கூடிய சதுர மற்றும் செவ்வக வடிவங்கள் மிகவும் சிறந்தது. மிகவும் செங்குத்தான அல்லது மிக உயரமான படிக்கட்டுகள், ஒவ்வொரு முறையும் அதைப் பயன்படுத்தும்போதும், ஒருவர் மிகவும் களைப்பாக உணரக்கூடும். இதற்காகவே, சுழல் படிக்கட்டுகளைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் வீட்டு உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
வாஸ்து படி படிக்கட்டுகளுக்கான வண்ணங்கள் நாளின் எந்த நேரத்திலும் ஏறுவதும் இறங்குவதும் சுலபமாக இருக்க, உங்கள் படிக்கட்டுகள் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகளுக்கான வண்ணம் அல்லது அலங்காரத்துக்காக இருண்ட அடர்த்தியான வண்ணச்சாயல்களை தேர்ந்தெடுப்பதால், அது இயற்கையாகவே ஒரு இருண்ட தோற்றத்தை ஏற்படுத்தும். அதற்காக, படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகளுக்குப் பளபளப்பாக இருக்கும் வெளிர் வண்ணச்சாயல்களைத் தேர்ந்தெடுக்கவும். அடர்த்தியான வண்ணங்களை, குறிப்பாக சிவப்பு மற்றும் கருப்பு, தவிர்க்கவும், ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். படிக்கட்டுகளை ஒட்டிய சுவர்களை நீங்கள் விரும்பும் சுவர் படத்தாள்களுடன் அலங்கரிக்கலாம், ஆனால் அவை மிகவும் அடர்த்தியான இருண்ட வண்ணங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.
படிக்கட்டுகளின் கீழேயுள்ள இடத்தைப் பயன்படுத்துதல் சிறிய வீடுகளில் படிக்கட்டுக்குக் கீழே உள்ள இடத்தைச் சிறிய சமையலறை, குளியலறை அல்லது பூஜை அறை கட்டுவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், அந்தப் பகுதியை உகந்த வகையில் பயன்படுத்த ஒரு சிறிய வேலையிடம் உருவாக்கப்படுகிறது, இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். படிக்கட்டுக்குக் கீழேயுள்ள இடத்தை சாதாரண வீட்டுப் பொருட்களைச் சேமிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். பணம் அல்லது நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட அலமாரிகளை அந்த இடத்தில் வைக்கக்கூடாது. தேய்ந்து போன காலணிகள் அல்லது தேவையில்லாத பொருட்களை அங்கு வைக்க வேண்டாம்.
படிக்கட்டு அலங்காரத்திற்கான வாஸ்து விதிகள் வாஸ்து விதிகளின்படி, படிக்கட்டுச் சுவர்களைக் குடும்ப புகைப்படங்களால் அலங்கரிக்கக் கூடாது, ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மலர்ந்த பூக்கள், செழிப்பான பசுமை நிற இயற்கை காட்சிகள், மலைகள் அல்லது அருவமான கலை வடிவங்கள் போன்றவற்றால் படிக்கட்டுச் சுவர்களை அலங்கரிக்கவும். படிக்கட்டுக்குக் கீழேயுள்ள பகுதியில் செடிகளுக்கான செராமிக் பானைகளை வைக்கவும். வாஸ்து படி, கண்ணாடியை படிக்கட்டுகளுக்கு முன்பாக அல்லது அதற்கு அடியில் தொங்கவிடுவது எதிர்மறை சக்தியை ஈர்க்கும். நீரூற்று அல்லது மீன்தொட்டியை படிக்கட்டுக்கு அடியில் வைக்க வேண்டாம். படிக்கட்டு பகுதி நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும்.
படிக்கட்டு கைப்பிடிக்கான வாஸ்து விதிகள் படிகளைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், படிக்கட்டு கைப்பிடிகள் அல்லது கைப்பிடிகள் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். மேலே ஏறும் அல்லது கீழே இறங்கும் போது வசதியளிக்கும் வகையில் இருக்க வேண்டும். வாஸ்துவின் படி, தென்மேற்கு திசை படிக்கட்டுகளுக்குப் பளிங்கு அல்லது கற்களால் ஆன கைப்பிடிகளை தேர்ந்தெடுக்கவும். மேற்கில் உள்ள படிக்கட்டுகளுக்கு உலோக கைப்பிடிகளை, கிழக்கு மற்றும் தெற்கு திசை படிக்கட்டுகளுக்கு மரத்தால் ஆன கைப்பிடிகளைப் பயன்படுத்தவும்.
பார்வைக்கு அழகாகத் தோற்றமளித்தாலும், கைப்பிடிகள் இல்லாத படிக்கட்டு அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை.
படிக்கட்டுகளை ஒட்டிய இடத்தைப் பயன்படுத்துவதற்கான வாஸ்து விதிகள் வாஸ்து வல்லுநர்கள், படிக்கட்டுகளை ஒட்டிய சுவரில் தெய்வங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். சிறந்த கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த படிக்கட்டுகளை ஒட்டிய சுவர் பகுதிகளைப் பயன்படுத்தலாம். வால்பேப்பர்களால் அலங்கரிக்க விரும்பினால், வெளிர் நிறங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் படிக்கட்டு பிரகாசமாகவும், நன்கு வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். வெளிர் வண்ணச் சுவர் காகிதங்கள், எல்லா நேரங்களிலும் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்யும்.
தீவிர படிக்கட்டுக் குறைபாடுகள்
வடகிழக்கு பகுதியில் படிக்கட்டு
சுழல் படிக்கட்டுகள்
கட்டிடத்தைச் சுற்றி வரும் படிக்கட்டுகள்
வட்ட மற்றும் சுற்றுப் படிக்கட்டுகள்
உடைந்த படிகள்
இருண்ட அடர்த்தியான வண்ணம் கொண்ட படிக்கட்டு
கட்டுக் குலைந்த அல்லது கிரீச் ஒலி எழுப்பும் படிக்கட்டு
படிக்கட்டு வாஸ்து தோஷம்
படிக்கட்டுகளில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் உறுப்பினர்கள் உடல், மன மற்றும் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம். எடுத்துக்காட்டாக, வடகிழக்கு மூலையில் அல்லது ‘ஈஷன் கோனா’வில் அமைக்கப்படும் படிக்கட்டு மிகப்பெரிய வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த மூலையில் அமைக்கப்படும் படிக்கட்டுகளால், குடியிருப்பாளர்களுக்கு மூளை, சிறுநீரகம் அல்லது இதயம் தொடர்பான கடுமையான நோய்கள் ஏற்படலாம்.
படிக்கட்டு வடிவமைப்பு பற்றிய முக்கியமான உண்மைகள்
படிக்கட்டில் ஏற்றம்: ஒரு படிக்கட்டில், ஏற்றம் என்பது மிதிக்கும் இடத்தின் மேலிருந்து அடுத்த மிதிக்கும் இடத்திற்கு செல்லும் செங்குத்து தூரத்தை குறிக்கிறது. சர்வதேச குடியிருப்பு குறியீடு, அதிகபட்சமாக 7 ¾ அங்குல உயர்வை பரிந்துரைக்கிறது.
படிக்கட்டில் ரன்: ரன் என்பது ஒரு ஏறுபடியின் முகப்பிலிருந்து அடுத்த ஏறுபடியின் முகப்புக்கான கிடைமட்ட தூரம். இது மிதிக்கும் இடத்தின் (ரைசர்) அளவுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. சர்வதேச குடியிருப்பு குறியீடு குறைந்தபட்சம் 10 அங்குல ரனைப் பரிந்துரைக்கிறது.
படிக்கட்டுக்கான வாஸ்து படி பரிந்துரைக்கப்பட்ட ஏற்றம் மற்றும் ரன் உயரம்: பயனர்களின் அதிகபட்ச வசதியை உறுதிப்படுத்த, ஏற்றம் மற்றும் ரன் அளவு சரிசமமாக 18 அங்குலங்கள் இருக்க வேண்டும்.
படிக்கட்டு வாஸ்து: நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
ஒரு படிக்கட்டின் ஏற்றம் 4 அங்குலம் முதல் 75 அங்குலம்வரை இருக்க வேண்டும், அதே சமயம் படியின் பாதை அகலம் 10 முதல் 11.25 அங்குலம் வரை இருக்க வேண்டும்.
வீட்டிற்குள், படிக்கட்டுகளின் அகலம் மிக அதிகமாக இருக்கும்போது கைப்பிடிகள் இல்லாத படிக்கட்டுகளை அமைக்கலாம். ஆனால், வீட்டிற்குப் புறமாக கட்டப்படும் படிக்கட்டுகளுக்கு, ஐந்து படிகளுக்கு மேல் இருந்தால் கைப்பிடிகள் அமைப்பது கட்டாயமாகும்.
முற்றிலும் உடன்படாத நிலையில், தற்காலிக பயன்பாட்டுப் படிக்கட்டுகளை வைத்திருப்பது நல்ல யோசனையாக இருக்காது. அவை கவனத்தை சிதறடிக்கும் மற்றும் மிகவும் ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியவை.
வாஸ்து படி மோசமான படிக்கட்டு வடிவமைப்பு
படிக்கட்டுகள் ஒரு வீடுகளில் மேலும் கீழும் நடக்க உதவும் கருவியாகக் கருதப்பட்டு, அது பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இன்று, படிக்கட்டுகள் நவீன வீடுகளின் சிறப்பான பாணியாக அமைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில், உரிமையாளர்கள் பார்வையாளர்களைக் கவரும் நோக்கத்துடன் பெரும் திட்டமிடல்களுக்கிடையே விரிவான படிக்கட்டு வடிவமைப்புகளை உருவாக்கி, அதன் அடிப்படை பயன்பாட்டு விதிகளை புறக்கணிக்கிறார்கள். இது, சில சமயம், அதை ஒரு வேதனையான அல்லது சிக்கலான செயலாக்கமாக மாற்றி விடுகிறது. கீழே உள்ள படிக்கட்டு இதற்கான ஒரு எடுத்துக்காட்டு.
வாஸ்து விதிகள்: வீட்டில் படிக்கட்டுகள்
ஒரு மோசமான படிக்கட்டு வடிவமைப்பு வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றாதது வீட்டின் மற்ற பகுதிகளில் உருவாகும் நேர்மறை விளைவுகளைப் போக்கக்கூடும். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வீட்டின் மையத்தில் படிக்கட்டு அமைப்பது, கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
படிக்கட்டுகளின் மீதான வாஸ்து குறைபாட்டின் தாக்கம்
வாஸ்து கொள்கைகளை புறக்கணித்து உங்கள் வீட்டில் படிக்கட்டுகளை கட்டுவது நல்லதல்ல. இது, ஒட்டுமொத்த கட்டுமான திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடும், ஆனால் பெரும்பாலும் இதற்கு அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை.
ஒரு வீட்டிற்குள் வசிக்கும் மக்களின் நடமாட்டத்துடன் தொடர்புடைய எதுவும், ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அன்றாட நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கலாம். எனவே, படிக்கட்டுகள் குடும்பத்தின் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கின்றன. படிக்கட்டு தொடர்பான கட்டமைப்பு அல்லது பிற குறைபாடுகள் பெரிய அல்லது சிறிய விபத்துகளை உருவாக்கக் கூடும். வடிவமைப்புக் குறைபாடுகள் வீட்டில் வசிப்பவர்களின் நடமாட்டத்தை மிகவும் சிரமமுள்ளதாக்கி இடையூறாகவும் விளங்கலாம்.
“நீங்கள் வாஸ்துவின் மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டாலும், படிக்கட்டுகள் அமைப்பதை கவனமாகத் திட்டமிடாமல் இருந்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்,” என்று டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான ரஜத் காத்ரி குறிப்பிடுகிறார்.
மிக முக்கியமான பகுதிகளாக, வீட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து, படிக்கட்டுகள் வாஸ்து விதிகளின் மீதும் உரிய கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்வது, படிக்கட்டும், வீட்டின் பல்வேறு பகுதிகளின் கூட்டியக்கத்தைப் பொறுத்தது.
ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான ‘ம’காரம் ‘ந’காரம் ஆகிய இரண்டும் நீக்கிய ‘சிவாய’ என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட ‘முத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது.
அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும்.
இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை ‘மானதம்’ என்பர்.
தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் ‘மந்தம்’ எனப்படும்.
பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல் ‘உரை’ எனப்படும்.
‘மானதம்’ கோடி மடங்கு பலனும், ‘மந்தம்’ பத்தாயிரம் மடங்கு பலனும். ‘உரை’ யில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.
திருவைந்தெழுத்தின் ‘ம’காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘ய’காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் ‘சி’காரம் ‘வ’கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும். அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை
‘வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச் சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச் சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்’ போந்திடும் என்னும் புரிசடை யோனே‘
திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.
திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை
திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் ‘சி’காரம்; சிவலிங்கமாகும். ‘வ’காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை ‘ய’காரம். அம்பலவாணர் நிலை ‘ந’காரம். பலிபீடம் ‘ம’காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.
ஓர் எழுத்தான ஓ மிலிருந்து பஞ்ச பூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்
காற்றாகி ‘வ’ காரமாயும் நீர் ‘ம’ காரமாயும் நிலம் ‘ந’ காரமாயும் தீ ‘சி’ காரமாயும் விண் உயிரெழுந்து ‘ய’ காரமாயும் உள்ளவன் சிவன் ‘வமநசிய’ என்பதில் அடங்கும்.
உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் ‘நமசிவாய’ என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர். ‘அகாரம் உயிரே உகாரம் பரமெ முகாரம் மலமாய் வருமுப் பதத்திற் சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய் யகாரம் உயிரென் றறையலு மாமே’
உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்தி நான்கும் அகாரமாகும். புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும். முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும்.
இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.
‘நகார மகார சிகார நடுவாய் வகாரம இரண்டும் வளியுடன் கூடி ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க மகார முதல்வன் மனத்கத் தானே’
நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது.
ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.
‘சிவய’ என்பதுடன் முதலாக ‘சிவ’ என்பதைச் சேர்த்து ‘சிவயசிவ’ என்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும்.
சிவ மந்திரமும் – பலன்களும் : ———————————————
நங்சிவயநம என்று உச்சரிக்க – திருமணம் நிறைவேறும் அங்சிவயநம என்று உச்சரிக்க – தேகநோய் நீங்கும் வங்சிவயநம என்று உச்சரிக்க – யோகசித்திகள் பெறலாம். அங்சிவயநம என்று உச்சரிக்க – ஆயுள் வளரும், விருத்தியாகம். ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க – எதற்கும் நிவாரணம் கிட்டும். கிலி நமசிவய என்று உச்சரிக்க – வசிய சக்தி வந்தடையும் ஹிரீநமசிவய என்று உச்சரிக்க – விரும்பியது நிறைவேறும் ஐயும் நமசிவய என்று உச்சரிக்க – புத்தி வித்தை மேம்படும். நம சிவய என்று உச்சரிக்க – பேரருள், அமுதம் கிட்டும். உங்யுநமசிவய என்று உச்சரிக்க – வியாதிகள் விலகும். கிலியுநமசிவய என்று உச்சரிக்க – நாடியது சித்திக்கும் சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க – கடன்கள் தீரும். நமசிவயவங் என்று உச்சரிக்க – பூமி கிடைக்கும். சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும். சிங்றீங் என்று உச்சரிக்க – வேதானந்த ஞானியாவார் உங்றீம் சிவயநம என்று உச்சரிக்க – மோட்சத்திற்கு வழி வகுக்கும். அங்நங் சிவாய என்று உச்சரிக்க – தேக வளம் ஏற்படும். அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க – சிவன் தரிசனம் காணலாம். ஓம் நமசிவாய என்று உச்சரிக்க – காலனை வெல்லலாம். லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க – தானிய விளைச்சல் மேம்படும். ஓம் நமசிவய என்று உச்சரிக்க – வாணிபங்கள் மேன்மையுறும் ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க – வாழ்வு உயரும், வளம் பெருகும். ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க – அரச போகம் பெறலாம். ஓம் நமசிவய என்று உச்சரிக்க – சிரரோகம் நீங்கும். ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க – அக்னி குளிர்ச்சியைத் தரும்.
சிவ தீட்சை ——————-
அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
“ஸ்ரீம் அம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
“ஆம் ஓம் ஹரீம் ரீம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.
“குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
“ஸ்ரீங் அங் உங்” என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.
“பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே.”
“யங் வங் றீங்” என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
“சங் ரங் உம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
“இங் ரங் அவ்வு” லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
“மங் றீங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.
சிவ மந்திரங்கள் ————————– ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும். ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம். ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும். ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க – சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய நம என்று உச்சரிக்க – நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க – தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க – துன்பங்கள் விலகும். ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க – செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க – வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க – விஷங்கள் இறங்கும். அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க – சாதனை படைக்கலாம். ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க – சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க – முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க – ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க – தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க – விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க – முத்தொழிலும் சிறக்கும்.
ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க – பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க – மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க – மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க – வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க – பெரியகாரியங்களில் வெற்றி.
சங்யவ் சி மந என்று உச்சரிக்க – தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க – பிசாசு, பேய் சரணம் செய்யும்.
சிவன்மந்திர உச்சாடணங்கள் ———————————————-
மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள்.
எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.
இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.
பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.
இனி மந்திரங்கள்…. —————————–
தத்புருஷ மந்திரம் … கருவூரார் இதன் மூல மந்திரம் ‘நமசிவாய’. இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.
“நமசிவாயம் லங்க நமசிவாய” என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
“அலங்கே நமசிவாய நமோ” என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
“அங் சிவாய நம” என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
“ஊங்கிறியும் நமசிவாய நமா” என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
“ஓம் நமசிவாய” என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.
அகோர மந்திரம் —————————
இதன் மூல மந்திரம் “நமசிவ”, “சங் கங் சிவாயநமா” என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம். “மங் மங் மங்” என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம். “வசாலல சால்ல சிவாய நமா” என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம். “சரனையச் சிவாய நம” என உச்சரிக்கவானில் பறக்கலாமாம். “கேங் கேங் ஓம் நமசிவாயம்” என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர். “ஓங் சருவ நம சிவாய” என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம் ——————————
“கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்” என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம். “வங் வங் சிங் சிவாய நம”என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம். “சதா சிவாய நம” என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம். “ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம” என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள் —————————————
“சிவாய ஓம்” என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும். “ஓங் உங் சிவாய ஓம்” என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம். “கிருட்டிணன் ஓம் சிவாய நம” என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்
ஈசான மந்திரங்கள் ——————————-
“சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ” என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
“மங் நங் சிவ சிவாய ஓம்” என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
“வங் யங் சிங் ஓம் சிவாய” என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
“சிங் சிங் சிவாய ஓ” என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
“மய நசிவ சுவாக” உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.
பு.தாமோதரன் — நிறுவனர்.
( பஞ்சபூதங்கள் பாதுகாப்பு இயக்கம் )
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.