ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras
வணக்கம். நம்ம முத்திரை சேனலில், முத்திரைகள் பிடிப்பதன் மூலமாகக் கிடைக்கும் நன்மைகளுக்கும் நமது விரல்கள் எப்படி உபயோகப்படுகின்றன என்பதையும் பார்க்க இருக்கிறோம். கழுத்திலிருந்து ஆசனவாய் வரை இருக்கக்கூடிய 5 சக்கரங்கள் நம்முடைய புற வாழ்க்கைக்குத் தேவையான பிரதான சக்கரங்களாகும். தலைக்கு மேல் இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்கள் (அக்ய மற்றும் சச) ஞான மார்க்கத்திற்கானது.

நமது முன்னோர்கள் கைவிரல்களுடன் சக்கரங்களை எப்படிக் தொடர்புபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
- கட்டை விரல்: மணிப்பூரக சக்கரம்
- ஆள்காட்டி விரல்: அனாகத சக்கரம்
- நடுவிரல்: விசுத்தி சக்கரம்
- மோதிர விரல்: மூலாதார சக்கரம்
- சுண்டு விரல்: சுவாதிஷ்டான சக்கரம்
இந்த மாதிரி விரல்களில் சக்தி நிலைப்பாடு இயங்குவதனால்தான், நாம் முத்திரை பிடிக்கும் போது அந்த சக்கரங்களில் சக்தி நிலைப்பாடு அதிகமாகிறது. அந்தக் காரணத்தினாலேயே நாம் தியானம் செய்யும் போது மறக்காமல் முத்திரைகளைப் பிடித்துக்கொண்டு தியானம் செய்கிறோம்.
இந்த ஐந்து விரல்களுக்குரிய ஐந்து விதமான சக்கரங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டோம். அடுத்த வீடியோவில் இன்னும் சில நல்ல தகவல்களுடன் சந்திப்போம்.
இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் நன்றி. சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, கமெண்ட்ஸ் பண்ணுங்க.
குருவே நம, தந்தையே நம. நாம் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
https://youtu.be/KoRfHEHI5h8