ஒரு தலைக் காதல்

கண்ணே! இரவினுள் நிலவொளியில்
சிறு போராட்டம் நடக்குது
அல்லிக்கும் நிலவுக்கும் இது இயற்கையின் காதல்!

கண்ணே! மனதினுள் உன் நினைவொளியில்
பெரும் போராட்டம் நடக்குது
என் மனசாட்சிக்கும் இதயத்திற்கும் இது ஒரு தலைக் காதல்!

-ஜெய்கணேஷ்

காதலே கேள்வியா?

உன்னை கண்டவுடன் காலையில் பூத்தது காதல் பூவா
கன்னியே என் கண்களில் தோன்றிய நோவா!

நிலவொளியில் தோன்றி மறைந்த கன்னியே
மறைந்த தாமரையோ தோன்றிய அல்லியோ நீ

அன்பால் என்னோடு உருவாகி
பண்பால் என் உள்ளத்தில் பயிராகி

பெண்பால் உன் மீது காதல்
கொள்ள செய்த கன்னியே

நீ வரும் போது பூங்காற்று என்னிடம்
நீ திரும்பும் போது கொடும் தீ காற்று என்னிடம்

காதல் என்னும் பெயரால் கனவுகள் கொடுத்தவளே
கண்கள் இரண்டால் பல காட்சிகள் காட்டியவளே!

நீ தேவதையோ மோகினியோ நான் அறியேன்
ஆனால் என் இதயம் என்னிடம் இல்லை

உன் இதயம் எனக்குறியதா என்றும்
தெரியவில்லை பதில் சொல்வாய் பசுங்கிளியே!

நான் உன்மீது கொண்ட காதலே ஒரு கேள்வியா?

எழுதியது ஜெய்கணேஷ் காலம் (1997)

என்னவளே உன் பக்கம்

நிலவே! நீ ஒரு பக்கம் !
நான் ஒரு பக்கம்!
ஆனால் என் ஞாபகம் எல்லாம்
உன் ஒளியின் பக்கம்!

காற்றே! நீ தோன்றுவது எங்கோ!
நான் தோன்றுவது எங்கோ!
ஆனால் என் மூச்சு எல்லாம்
நீ வீசும் திசையான இங்கே!
Read the rest of this entry »

கவிதை

கற்பனையென்னும் பெயரிலே கவலை மறக்க
பிறர் கவலை தீர்க்க
மனதில் தோன்றி ஏட்டில் எழுத்தாய்
தோன்றும் ஓர் ஆறுதல் !

கனவுகள் என்னும் பெயரிலே
தோன்றிய சந்தோஷங்களை அனுபவிக்க
பிறர் சந்தோஷங்களை பெற
இதயத்தில் தோன்றி எழுதுகோலின் வழியாக
உருவான ஓர் இன்ப ஊற்று!

வாழ்க்கையென்னும் வழியினிலே வரும்
போராட்டங்களை எதிர்க்க
பிறர் செய்த போராட்டங்களை வர்ணிக்க
உள்ளத்தில் முடியும் ஓர் உணர்ச்சி!

எழுதியது ஜெய்கணேஷ் காலம் (24-06-97)

© 2020 Spirituality